Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யுவன் சங்கர் ராஜா, ஏ ஆர். அமீன் இணைந்து பாடிய நபிகளை போற்றும் தனிப் பாடல்

இசைஞானி வாரிசு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா , இசைப்புயல் வாரிசு ஏ ஆர் அமீன்  இணைந்து பாடிய நபிகளை போற்றும் “TALA AL BADRU ALAYNA” தனித்துவ பாடல் !

தமிழ் சினிமாவின் பெரும் ஆளுமைகளில் ஒருவரான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்களும், இசைப்புயல் ஏ ஆர்  ரஹ்மானின் மகன் ஏ ஆர்  அமீனும், இணைந்து முகம்மது நபிகளை (Pbuh), புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள் ளார்கள். இப்பாடல் ரசிகர்களுக் காக 2021 மே 14 அன்று வெளியிடப் படுகிறது.

“TALA AL BADRU ALAYNA” எனும் இப்பாடல் மதீனா நகரின் மக்கள், முகம்மது நபிகளை (Pbuh), போற்றி, தங்கள் மதீனா நகருக்கு வரவேற்று பாடிய வரலாற்று கவிதை பாடலை அடிப்படையாக கொண்டது. மக்களின் வேண்டுகோளை ஏற்று, மதீனா நகருக்கு முகம்மது நபிகள் (Pbuh), வருகைபுரிந்த போது, மதீனா மக்களால் வரவேற்று பாடப்பட்ட பாடல் இது. பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, மதீனா நகரில் உருவான இப்பாடல் உலகம் முழுக்கவே மிகவும் புகழ் பெற்றது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசைப்புயல் ஏ ஆர்  ரஹ்மானின் மகன் ஏ ஆர்  அமீனு டன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்.

இப்பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா கூறியது :

இத்தருணத்தில் நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். TALA AL BADRU ALAYNA போன்ற தெய்வீக பாடலை இசையமைப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை. மேலும் எனது சகோதரர் ஏ aarஅமீன் அவர்களுடன் இது போன்ற ஆன்மீக பாடலை இணைந்து பாடியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்மை சுற்றி எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்க, இப்பாடல் நம் ஆன்மாவில், மலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றார்.

பாடகர் ஏ ஆர் அமீன் கூறியதாவது:

நபிகளை (Pbuh), போற்றும் தெய்வீகமான பாடலை அன்பு சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியது மனதிற்கு மிகப்பெரும் மகிழ்வை தந்துள்ளது. இந்த இனிய ஈகைத் திருநாள் அனைவரது வீட்டிலும், அன்பையும், நிம்மதி அருளட்டும் என்றார்

Abdul Basith Bukhari அவர்கள் “Tala Al Badru Alayna” பாடலின் முழு அர்த்தத்தை தமிழ் மொழியில் தந்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடலுக்கான இசை வடிவத்தை, வடிவமைத்து உருவாக்கியுள்ளார். மேலும் திரு AR அமீன் அவர்களுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளார்.

முழுமையான தனித்துவ பாடலாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் மூலம் வரும் அனைத்து வருமானமும், தேவையுள்ள ஏழை, எளியோர்ருக்கு அளிக்கப்படவுள்ளது. இப்பாடலின் முழு வீடியோ வடிவம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

 

Related posts

ஜீவா நடிக்கும் த்ரில்லர் படம் “பிளாக்”

Jai Chandran

Jithan Ramesh’s risk in a cave for 22 days*

Jai Chandran

“இவன்தான் உத்தமன்” நகராதே நகராதே.. ஆனிருத் பாடிய பாடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend