Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நகைச்சுவை திகில் படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் நகைச்சுவை திகில் திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் திரைப்படத்திற்கு ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் உலகத்தர தயாரிப்பில் உருவாகும் நகைச்சுவை நிறைந்த திகில் திரைப்படமான இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மாபெரும் வெற்றிப்பெற்ற ‘லவ் டுடே’ படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட்டின் அடுத்த படைப்பாக வரவிருக்கும் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’, இந்நிறுவனத்தின் 24வது தயாரிப்பு ஆகும். ஏஜிஎஸ்ஸின் 23வது திரைப்படமாக ‘லவ் டுடே’ இந்தி பதிப்பும், 25வது படமாக தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் ‘தளபதி 68’-ம், 26வது தயாரிப்பாக ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கும் ‘தனி ஒருவன் 2’‍‍‍‍-ம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் செல்வின் ராஜ் சேவியர், இயக்குந‌ர்கள் சிம்புதேவன், சுமந்த் ராதாகிருஷ்ணனிடம் உதவி இயக்குநராக‌ பணிபுரிந்துள்ளார். சென்னையில் பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்ற, நிர்வாக தயாரிப்பை எஸ். எம். வெங்கட் மாணிக்கம் கவனிக்கிறார். சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, நமோ நாராயணன் போன்ற நட்சத்திரங்களுடன், ‘நானே வருவேன்’ படத்தில் நடித்துள்ள எல்லி ஆவரம், ஜேஸன் ஷா, பிஎனேடிக்ட் காரெட் போன்ற வெளிநாட்டு நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ பற்றி பேசிய இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர், “ரசிகர்களுக்கு வித்தியாசமான புதுவித அனுபவத்தை கொடுப்பதோடு நல்ல பொழுதுப்போக்காகவும் இப்படம் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் பார்த்து ரசிக்கும் வகையிலும் நகைச்சுவை, திகில், ஃபான்டசி கலந்த படமாக இதை உருவாக்கியுள்ளோம். இப்படம் அனைத்து வயதினரையும் நிச்சயம் கவரும்,” என்று கூறினார்.

ஒரு புறம் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து பிரம்மாண்ட படைப்புகளை தயாரித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட், மறு புறம் ‘லவ் டுடே’ போன்று வளர்ந்து வரும் மற்றும் புதிய திறமைகளுக்கும் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. அந்த வரிசையில் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ அமையும் என்று படகுழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும், அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படமான‌ ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகும்.

Related posts

தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

Jai Chandran

செல்ஃபி படத்தில் ஒரு ரா எனர்ஜி இருக்கு – வெற்றி மாறன்..

Jai Chandran

Title and First look of RKSuresh’s KottaiMuni

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend