திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’படம் வெளியாகி 5 வருடங்கள் முடிகிறது. இந்த படத்தில் நடித்தபோதுதான் நயன்தாரா வுக்கும் விக்னேஷ் சிவனுக் கும் காதல் மலர்ந்தது. இயக்குனர் விக்னேஷ் சிவன் 5 வருட நிறைவில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கி றார்.
விக்னேஷ் சிவன் தான் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நயன் தாரா நடிக்கிறார். தற்போது ’நெற்றிக் கண்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி விக்னேஷ் சிவன் கூறும்போது,’கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ‘நானும் ரவுடிதான்’ வெளி வந்து இன்றுடன் 5 வருடங்கள் முடிவடைந்து இருக்கின்றது. அளவில்லா அன்பு மற்றும் பேதரவால் ’நானும் ரவுடி தான்’ பல இதயங்களை வென் றெடுத்து உள்ளது. எங்கள் வாழ்வை மாற்றியது. 5 வருடங்களுக்கு பிறகு தற்போது இதே நாளில் எங்கள் தயாரிப்பு நிறுவன மான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத் தின் முதல் தயாரிப்பான ’நெற்றிக்கண்’ தயாராக உள்ளது. என்றும் எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்களின் அதே அளவிலான அன்பையும் ஆதரவையும் இந்த திரைப் படத்திற்கும் தருவீர்கள் என நம்புகிறோம். ஆசீர்வாதம் அளித்த கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி’ என தெரிவித்திருக்கிறார்.