கொல்கத்தாவில் உள்ள முனைவர் தேபால் தேப்’இன் பசுதா ஆய்வகம் இந்தியாவின் 1500க்கும் மேற்பட்ட அரிசி வகைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முனைவர் தேபால் தேப் ஒடிசாவின் பசுதாவில் உள்ள தனது பண்ணையில் வளர்த்து பாதுகாக்கும் இந்த ‘மறந்துபோன’ அரிசி வகைகள் பாரம்பரிய விவசாய அறிவின் இழந்த மரபைக் காட்டுகின்றது. இந்த ஆய்வகம் பாரம்பரிய அரிசியின் மரபணு பன்முகத்தன்மை, மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து பண்புகள் குறித்து – உயிர்வேதியியல் மற்றும் மூலக்கூறு பகுப்பாய்வு மூலம் ஆராய்ச்சி செய்கின்றது. கல்வி இதழ்களில் சக மதிப்பாய்வு (peer review) செய்யப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவதும், கிராமவாசிகள் மற்றும் விவசாயிகளுடன் ஈடுபடுவதன் மூலமாகவும் பாரம்பரிய அறிவு பரிமாற்றதளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது இந்த ஆய்வகம்.
பாரம்பரிய அரிசி வகைகள் சுவை, நறுமணம் போன்ற பல அம்சங்களில் உயர்ந்ததாகக் கருதப்படுகின்றன. மேலும் அவை பூச்சி, வறட்சி மற்றும் வெள்ளத்தை எதிர்க்கின்றன. நாம் உட்கொள்ளும் அரிசி வகைகளை ஒரே மாதிரியாகக் மாறி வருவதால், பாரம்பரிய அரிசி வகைகளைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படுகின்ற ஆராய்ச்சி இன்னும் முக்கியமாக திகழ்கின்றது. தற்போதைய கோவிட் -19 நெருக்கடி காரணமாக, ஆய்வகத்தை இயக்குவதற்கான நிதி குறைந்துவிட்டது. மேலும் ஆய்வகம் மூடப்படும் விளிம்பில் இருந்தது. நடிகர் கார்த்தி, உழவன் அறக்கட்டளையுடன் இணைந்து, ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் இயங்குவதற்காக தேவையான பணம், நன்கொடையாக அளித்ததுள்ளார்.
மிலாப் ஆன்லைன் தளம் மூலம் நிதி திரட்டலும் ஏற்பாடு செய்யப்பட்டது.
நன்கொடை கொடுக்க: https://milaap.org/fundraisers/support-basudha
காணொளி: https://youtu.be/jhqOOD3BWyM