தென் இந்திய சினிமா துறையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வரலாறும், பெருமையும் இருக்கிறது. விக்ரமன் முதல் கேஎஸ் ரவிகுமார் வரை தென்னக சினிமாவிற்கு பல தரமான கலைஞர்களை அந்நிறுவனம் தந்திருக்கிறது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் வகையிலான படைப்புக்களை, உலக ரசிகர்க ளும் ரசிக்கும் வண்ணம், தொடர்ந்து தந்து வருகிறது. பெரும் வெற்றிப்பயணத்தை பல தசாப்தங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிறுவனம் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற் றாமல், அவர்கள் கொண்டா டும் படைப்புகளை, தரமான வடிவத்தில் தருவதில் முதன் மையாக இருக்கிறது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தற்போது இந்நிறுவனம் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.
ஜீவா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை பிரபல இயக்கு நர் சசியின் உதவியாளர் சந்தோஷ் ராஜன் இயக்குகி றார். தற்போதைக்கு இதற்கு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவ னத்தின் “தயாரிப்பு எண் 91” எனக்குறிப்பிடப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குழு கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் தொடங்கியது.
பட இயக்குநர் சந்தோஷ் ராஜன் இது பற்றி கூறிய தாவது:
தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவராக திகழும் ஆர்.பி சௌத்ரி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன், இயக்குநராக எனது திரைப் பயணம் துவங்குவது, மகிழ்ச் சியையும், பெருமையும் அளிக் கிறது. பல பெரும் கலைஞர் களுக்கு, இயக்குநர்களுக்கு திரையுலகில் திறவுகோலாக, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் வாய்ப்பளித்து, உருவாக்கிய பெருமை கொண்டவர் ஆர்.பி. சௌத்ரி. அப்படியான நிறுவ னத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் ஆசிர்வாதம். இத்தருணம் உற்சாகத்தையும், சுற்றிலும் நிறைய நேர்மறை எண்ணங் களையும் என்னுள் விதைத்தி ருக்கிறது. வழக்கமாக ரசிகர் கள், நடிகர்களையும், இயக்கு நர்களையும் பார்த்து, அவர் களை பின்பற்றி படம் பார்த்து வந்த முறையை, தகர்த் தெறிந்தது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம். ஒரு தயாரிப்பு நிறுவனத்திற் கென்று தனி ரசிகர் பட்டாளத் தை உருவாக்கி, தரமான குடும்ப படங்களை, ரசிகர்கள் 100% சதவீதம் கொண்டாடும் வகையில் தொடர்ந்து தந்து வந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளை கூட்டுவது மட்டுமல்லாமல், அந்த எதிர்பார்ப்பை தவறாது பல தசாப்தங்களாக நிறைவேற்றி வந்திருக்கிறது. அதனால் தான் தென்னக சினிமாவின் முடி சூடா மன்னாக திகழ்கிறது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம்.
இந்நிறுவனத்தில் ஜீவாவுடன் இணைவது எனக்கு இரட்டை சந்தோஷமான தருணம், தமிழ் சினிமாவின் அரிய திறமைக ளுல் ஒருவர் ஜீவா. அவர் மிக ஆழமான படைப்புகளில் திறமையான நடிப்பை தந்தும், கமர்ஷியல் படங்களில் எளி தாக ரசிகர்களை கவர்ந்தும் சாதனை படைத்தவர். மாஸ் மற்றும் க்ளாஸ் எனும் இரண்டு திறமையும் கொண்டவர் அவர். இயக்குநர் சசியின் “டிஷ்யூம்” படத்தில் உதவியாளராக பணிபுரிந்த போது படப்பிடிப்பில் நடிகர் ஜீவாவின் நடிப்பு திறமையை கண்டு வியந்திருக்கிறேன். அப்படத்தில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. இயல்பிலேயே மிகவும் எளிமையான, கலகலப்பான மனிதர். சுற்றியுள்ளவர்களை தன் கலகலப்பான குணத்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். எனது கதையையும் அப்படியான தொரு கதாப்பாத்திரத்தை கொண்டிருப்பதால் அவரை அணுகினேன். தற்போது தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக வளர்ந்து, இந்திய அளவிலான முக்கிய நடிகராக மாறிவிட்ட போதிலும், அவர் அதே எளிமையுடனே தான் பழகுகிறார். இது தான் எந்த ஒரு இயக்குநரும் அவருடன் பணிபுரிய விரும்பும் குணமாக இருக்கிறது. இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆசிர்வாதம். மேலும் இப்படம் தரப்போகும் மிகச்சிறந்த அனுபவங்களுக் காக காத்திருக்கிறேன்.
காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரயாகா நாக்ரா என் இரண்டு நடிகைகள் இப்படத்தில் ஹீரோயின்களாக நடிக்கிறார் கள். மேலும் விடிவி கணேஷ், சித்திக், ஷா ரா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள் ளார்கள்.
ஜிமிக்கி கம்மல் புகழ் ஷாநவாஸ் ரெஹிமான்இசை அமைக்கிறார். சித்தார்த் ராமசுவாமி ஒளிப்பதிவு செய் கிறார். ராகவேந்திரன் எனும் ஶ்ரீகாந்த் எடிட்டிங் செய்கிறார். ஆஎ. சரவணன் சண்டை பயிற். ஆர் மோகன் கலை அமைக்கி றார்.