படம் : டி டி ரிட்டர்ன்ஸ்
நடிப்பு : சந்தானம், சுரபி, மஸும் சங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராம், கிங்ஸ்லி, மாறன், முனிஸ்காந்த், பிபின், தீனா, சேது, தங்கதுரை, மானஸ்வி, ரீட்டா, தீபா
தயாரிப்பு: சி.ரமேஷ்குமார்
இசை: ஆஃப்ரோ
ஒளிப்பதிவு: தீபக் குமார்
இயக்கம்: எஸ்.பிரேம் ஆனந்த்
பி ஆர் ஒ: நிகில் முருகன்
சுரபியை காதலிக்கிறார் சந்தானம். பெப்சி விஜயனிடம் வாங்கிய கடனை திருப்பி தர முடியாததால் சுரப்பியை அவரது மகன் கிங்ஸ்லிக்கு கட்டி வைக்க முயல்கின்றனர். இதையறிந்த சந்தானம் பணத்தை கொடுத்து சுரபியை மீட்க எண்ணுகிறார். அப்போதுதான் பெப்சி விஜயன் வீட்டில் கொள்ளையடித்த பணமூட்டை சந்தானம் கைக்கு கிடைக்கிறது. அதிலிருந்து பணத்தை எடுத்து விஜயனுக்கு கொடுத்து சுரப்பியை மிட்கிறார். தன்னிடம் தரப்பட்ட பணம் தன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பதை கண்டுபிடித்து சந்தானத்தை பிடிக்க துரத்து கிறார். இதற்கிடையில் அந்த பண மூட்டை பேய் பங்களாவில் சிக்கிக் கொளகிறது. அந்த பணத்தை எடுக்கச் செல்லும்போது பேய் சந்தானத்தை தன்னுடன் கேம் ஆடிவிட்டு அதில் ஜெயித்த பிறகு பணத்தை எடுத்துச் செல் என நிபந்தனை விதிக்கிறது. இந்நிலையில் அந்த பணத்தை தேடிக்கொண்டு பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள்.பேய் பங்களா விற்கு வருகின்றனர். ஒட்டு மொத்தமாக எல்லோரும் பேய் களிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்கள் கதி என்னவாகிறது என்பதை முழுக்க காமெடி கலந்து படம் விளக்குகிறது.
தில்லுக்கு துட்டுபடத்தின் மூன்றாம் பாகமாக டி டி ரிட்டர்ன்ஸ் உருவாகி இருக்கிறது. முதல் இரண்டு பாகங்களை தூக்கி சாப்பிடும் காமெடி காட்சிகள் தொடக்கம் முதலே ஆரம்பமாகி விடுகிறது. கதையின் நாயகனாக சந்தானம் நடித்திருக்கிறார். கடந்த சில படங்களாகவே சந்தானம் தனக்கு கைவந்தக்கலையான காமெடியை மறந்து நடிப்பு, ஆக்ஷன் என்று முயன்றுக் கொண்டிருந்தார். சந்தானத்திட மிருந்து மற்றொரு காமெடி கலாய் படம் எப்போது வரப்போகிறது என்று கேட்டுக் கொண்டிருந்தவர் களுக்கு பதில் தரும் படமாக வந்திருக்கிறது டி டி ரிட்டர்ன்ஸ்.
கலாய் பாணியை மூட்டை கட்டி வைத்திருந்த சந்தானம் இப்படத்தில்.ஒருத்தரையும் விடாமல் ஏன் பேய்களை கூட விடாமல் கலாய் கலாய் என்று கலாய்த்து தருகிறார் .
மொட்டை ராஜேந்திரன் பேய் பங்களாவிற்குள் நுழைந்த பிறகு காமெடி காட்சிகள் அரங்கை சிரிப்பலையால் அதிர விடுகிறது. பேய்க்கு பயந்து கதவின் உச்சியில் மொட்டை ராஜேந்திரன் நின்றபடி ஒளிந்துக்கொள்ள அந்த கதவை.ஒவ்வொருவராக திறக்க ராஜேந்திரன் கால்களை விரிக்க முடியாமல் விரித்து படும் அவஸ்தை வயிற்றை பதம்.பார்த்து விடுகிறது. பெப்சி விஜயன் , ‘டேய் டேய் டேய் என்று கத்தியபடி சந்தானத்தை பத்துக்கு பத்து அறையில் துரத்திக்கொண்டு ஓட்டுவது அலறல் சிரிப்பை வரவழைக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் ரன் வின் சீட்டு எடுக்கும் குலுக்கல் போட்டி டியில் மீண்டும் ஒரு சிரிப்பு அரங்கேற்றம் நடக்கிறது கேம் முள் தன்னை பார்த்து நின்றுவிடாமல் இருக்க மொட்டை ராஜேந்திரன் லேசாக நகர முயல அவரை பேய் இருக்க பிடித்துக் கொண்டு நகர விடாமல் இழுப்பது வெடிக் காமெடி.
இன்னும் முனிஸ்காந்த் மாறா, சேது.விபின்,.கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை கோஷ்டியின் காமெடி கலாட்டா சரம் சரமாய் வரிசை கட்டுகிறது. .
சி.ரமேஷ்குமார் தயாரித்திருக் கிறார் ஆஃப்ரோ இசை காட்சி யோடு ஒன்றியிருக்கிறது. பேய் படம் பார்க்கிறோம் என்ற பயம் வராமல் காமெடி படம் பார்க்கும் எபெக்ட் தந்திருக்கிறார்.
தீபக் குமார் ஒளிப்பதிவு ஓகே
இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த் டென்ஷன் ப்ரியாக கவலை மறந்து பார்க்க ஜாலியான பேய் படத்தை இயக்கி தந்திருக்கிறார்.
டி டி டிட்டர்ன்ஸ் – பேயே பாத்தாலும்.குலுங்கி குலுங்கி சிரிக்கும்.