நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. முதல்வராக பொறுப்போற்கும் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் வி.சி.குகநாதன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தலைவர் ஸ்டாலின் அவர்களின் கடுமையான உழைப்பினால் பெறப்பட்ட
இந்தத் தேர்தல் வெற்றியால் தமிழர்களின் சுயமரியாதை காப்பாற்றப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டின் தனித்துவம் மீட்கப்பட்டு இருக்கிறது.
கழகங்கள் இல்லாத தமிழகத்தை எந்தக் கொம்பனாலும் உருவாக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
‘வெற்றிடம்’ என்ற வார்த்தைக்கு தமிழகம் எப்போதும் இடம் தராது என்பது புரியவைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் அரசியல் மாற்றத்திற்கு
தமிழகம் அடித்தளம் அமைத்து இருக்கிறது.
துக்ளக் கோமாளிகள் எல்லாம் சொன்ன மாற்றம் எங்கே நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் தமிழர்களே…
இவ்வறு வி.செ.குகநாதன் கூறி உள்ளார்.