Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே ( பட விமர்சனம்)

படம்:  வாழ்வு தொடங்கும் இடம் நீதானே

நடிப்பு: ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத்

தயாரிப்பு:  நடிகை நீலிமா இசை

இசை: தர்ஷன் குமார்

இயக்கம்: ஜெயராஜ்  பழனி

ரிலீஸ்: ஷார்ட் ஃப்ளிக்ஸ்  ஒ டி டி தளம்

பி ஆர் ஒ: யுவராஜ்

 

ஷகீராவுக்கு(நிரஞ்சனா) அவர்கள் வீட்டில் இர்ஃபானை(அர்ஷத் மாப்பிள்ளை பேசி முடித்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கின் றனர். ஷகீரா மீது ஏற்கனவே இர்ஃபானுக்கு காதல்.  அவரைத் தான்   மணக்கப் போகிறோம் என்று தெரிந்ததும் இர்ஃபான் மகிழ்கிறான்.  ஷகீராவை ரகசிய மாக கடற்கரைக்கு அழைத்து வந்து பேசுகிறான். அப்போது ஷகீரா அதிர்ச்சியான தகவல் சொல்கி றாள். தனக்கும், வினோதாவுக்கும் (ஸ்ருதி ) ஓரின காதல் இருப்பதாக வும் அவரைத் தான் திருமணம் செய்ய உள்ளதாகவும் சொல்கி றாள். அதைக் கேட்டு இர்ஃபான் அதிர்ச்சி அடைகிறான். இந்த விஷயம் ஷகீராவின் தந்தைக்கு  தெரிய வர அவர் மகளை கண்டிக் கிறார். தன் மகளை இந்நிலைக் குள்ளாக்கிய  வினோதாவை தாக்குகிறார். ஊர் மக்களும் இது மார்க்கத்துக்கு விரோதமான செயல் என்று வினோதா, ஷகீரா இருவரையும்.கல் வீசி தாக்குகின் றனர். இதன் முடிவு என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.

ஷார்ட் ஃப்ளிக்ஸ் ஒ டி டி  தளத்துக் காக  இப்படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்திருக்கிறார். கடல் சார்ந்த பகுதியில் கதைக் களம் அமைக்கப்பட்டாலும்.இது உஷ்ணத்தை கிளப்பும் கதை என்பதில் சந்தேகமில்லை.  லெஸ்பியன் அதாவது பெண்கள் இருவருக்கிடையே காதல் உணர்வை இப்படம் பேசுகிறது.

தொடக்க காட்சியில் ஏதோ திருமண கலாட்டா நடக்கப் போவதுபோல் .மணப்பெண் நிரஞ்சனா மற்றும் காதலன் அlர்ஷத்  வீடுகளை காட்டி அங்கு திருமண பரபரப்பு   உள்ளதை போல் காட்டும் இயக்குனர் அந்த சீனை அடுத்து ஜோடிகள் இருவரின் வாழ்க்கை திசையை யும் முற்றிலுமாக மாற்றிவிடப் போகிறார் என்பதை உணர முடியவில்லை.

வினோதவாக வரும் ஸ்ருதி மீனவ கிராமத்துக்குள் நுழையும்போது எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகுவதும் ஒரு கட்டத்தில் ஸ்ருதி யிடம் நெருக்கம் காட்டு வதும் என சீன்கள்  நகரத் தொடங்கியதும் சூடு பறக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும்போது காட்சி 100 கிலோ வெயிட்டான  கணக்கிறது  இருவரின் லிப் டூ லிப் சீன்.கூடுதல் ஷாக்.

ஸ்டுதி,.நிரஞ்சனா இருவருமே துணிச்சலாக இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்திருக் கிறார்கள். வேடத்துக்காக என்று சொல்லி ஆபாசத்துக்கு இடம்.கொடுக்காதது நிம்மதி.

பரணிதரன், செந்தில் குமாரின் ஷார்ட் ஃப்ளிக்ஸ் ஒ டி டி தளத்தில் ரிலீஸாகும் இப்படத்தை நீலிமா இசை தயாரித்திருக்கிறார். இயக்குனர்  ஜெயராஜ் பழனி பெண்களின் காதல் சுதந்திரத்தை வலியுறுத்தி இருக்கிறார்.

தர்ஷன் குமார் இசை லோவாக ஒலிக்கிறது. இன்னமும் ஹைபிட்ச்சில் சில காட்சிகளை சித்தரித்திருந்தால்  அழுத்தமாக இருந்திருக்கும்.

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே – அசாதாரணம்.

Two And A Half Star Rating Illustration Vector

 

 

 

 

 

Related posts

27ம் தேதி 50 இசை கலைஞர்கள் சங்கமம்..

Jai Chandran

7வது முறை இணையும் இயக்குநர் சுசீந்திரன், டி.இமான் கூட்டணி !

Jai Chandran

LIGER (Saala Crossbreed) Theatrical Trailer On July 21st..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend