Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சந்திரமுகி2 ( பட விமர்சனம்)

படம்: சந்திரமுகி2

நடிப்பு: லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா,  லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்ஷா, மிதுன் ஷியாம், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், ரவி கார்த்திக், ஆர்.எஸ்.சிவாஜி, ஓய்.ஜி.மகேந் திரன், மனோபாலா,  கூல் சுரேஷ், மானஸ்வி

தயாரிப்பு: லைகா சுபாஸ்கரன்

இசை: எம்.எம்.கீரவாணி

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்

இயக்கம்: பி வாசு

பி ஆர் ஓ: யுவராஜ்

ராதிகா குடும்பத்துக்கு அடிக்கடி ஏதாவது சிக்கல் வருகிறது. குலதெய்வம் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றினால் பிரச்னைகள் தீரும்.என்று குடும்ப ஜோதிடர் கூறுகிறார். அதன்படி குடும்பத் துடன் வேட்டையபுரத்தில் உள்ள துர்க்கா கோவிலுக்கு செல்கின் றனர். முன்னதாக அங்குள்ள வேட்டையன் பங்களாவில் ராதிகா குடும்பம் தங்குகிறது. சந்திரமுகி ஆவி இருக்கும் அந்த பங்களாவில் ராதிகா குடும்பம் தங்கியதும். அமானுஷ்யங்கள் நிகழ்கிறது. ராதிகா குடும்பத்துடன் பாண்டியன்( லாரன்ஸ்) வருகிறார். கோயிலை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டாம், விளக்கு ஏற்றினால்  வேட்டையனுக்கு  சக்தி வந்துவிடும் என்று  சந்திரமுகி ஆவி ராதிகா குடும்பத்தை விரட்ட பார்க்கிறது. ஆனால் லாரன்ஸ் கோயிலை சுத்தம் செய்ய வேட்டை யனுக்கு பவர் வருகிறது. அதே சமயம் சந்திரமுகியும் வெளிப்பட்டு மோதலுக்கு தயாராகின்றனர் . இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

சூப்பர் ஹிட்டாக ஓடிய சந்திரமுகி படத்தின் 2ம் பாகம் என்றதுமே அப்படியென்னதான் இந்த கதையில் சொல்லி இருக்கி றார்கள் என்ற ஆர்வம் ரசிகர் களுக்கு பிறக்கும். அந்த ஆர்வம்தான் படத்துக்கும் பலம். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்திருக்கிறது என்றால் முக்கால் கிணறு தாண்டியிருக் கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தில் வரும் சந்திரமுகி பங்களா பளபளப்பாகி இருக்கிறது. பாண்டியனாக வரும்  லாரன்ஸ்  வேட்டையனாக எப்போது மாறு வார் என்ற எதிர்பார்ப்பு  சீனுக்கு சீன் அதிகரிக்கிறது.

இடைவேளைக்கு பிறகுதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது. சந்திரமுகியாக எண்ட்ரி தருகிறார் கங்கனா ரனாவத். பார்க்க பளிச் சென இருக்கிறார். சந்திரமுகி முதல் பாகத்தில் நிஜ சந்திரமுகி யை காட்டாத இயக்குனர் இதில் கங்கனா ரனாவத்தை நிஜ சந்திரமுகியாக  காட்டுகிறார்.

லாரன்ஸ் வே ட்டையனாக வருவார் என்று பார்த்தால். வேட்டையனின் தோழராக வந்து எதிர்பாராத திருப்பம் தருகிறார். சந்திரமுகியை  அடைவது யார் என்ற போட்டியில் வேட்டையனை  லாரன்ஸ் கொல்வதும் மற்றொரு அதிர்ச்சி. வேட்டையனும் நானே,  செங்கோட் டையனும் நானே என்று ஒரே போடாக  போட்டு  அதகளம் செய்கிறார்.

லாரன்சுக்கும், கங்கனாவுக்கும் நடக்கும் வாள் சண்டை ஒ கே. சொல்ல வைக்கிறது ஆனால். லாரன்ஸ் அறிமுக சீன் கொஞ்சம் ஓவர் பில்டப் ஆகிவிடுகிறது. மோட்டார் சைக்கிளில் பாய்ந்து எரிந்து கொண்டிருக்கும் பஸ்ஸிலி ருந்து குழந்தைகளை மோட்டார் சைக்கிளிலேயே மீட்டு வருவதும் அதேபோல் ஒரே குத்தில் கருஞ் சிறுத்தையை தரையில் சாய்த்து காலால் அதன் கழுத்தை மிதித்து கொல்வதையும் அதிர்ச்சியாகத் தான் பார்க்க வேண்டி உள்ளது.

படத்தில் சஸ்பென்ஸ் பாத்திரமாக வருகிறார் லட்சுமி மேனன். நீண்ட நாட்களுக்கு பிறகு ரீஎன்ட்ரி தந்திருந்தாலும் சந்திரமுகி ஆவி பிடித்தவராக பேயாட்டம் போட்டி ருக்கிறார்.

லைகா சுபாஸ்கரன் படத்தை அதிக பொருட் செலவில் தயாரித்திருக் கிறார். தமிழ்க் குமரன் தயாரிப்பு ஒட்டுமொத்த பணியையும் கையாண்டிருக்கிறார்.

ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசையில் பாடல்கள் சோடை போகவில்லை. ரிப்பிட் மூடில்.கேட்டால் நாவில் ஒட்டிக் கொள்ளும்

ஆர்.டி.ராஜசேகர் பளீரென ஒளிப்பதி செய்துள்ளார்..

பி வாசு எப்போதுமே கமர்ஷியல் பட கிங். அதை இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார். குடும்பதுடன் படத்தை பார்க்க ஏனென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார். கதைப்படி 2ம் பாகத்திலும்  வேட்டையன், சந்திரமுகி மோதல் தீர்ந்த பாடில்லை என்பதால் மூன்றாம் பாகத்துக்கு மீண்டும்  அடிபோட் டிருக்கிறார் இயக்குனர் வாசு.

சந்திரமுகி 2 – ஜாலியாக பொழுதுபோகும்

 

 

Related posts

Anbulla Ghilli Trailer On July 3rd..

Jai Chandran

“காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !

Jai Chandran

மியூசிக் ஸ்கூல் ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend