2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்து வமிக்க, தரமான படைப்பு களை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ஜீ5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப் புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது.
Vanibojan in Radha Mohan direction
வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை ஜீ5 நிறுவனம் வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது.
இதில் எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மகேஷ் முத்துசாமி ஒளிபதிவு செய்கிறார். கே.எல்.பிரவீன் எடிட்டிங் செய்கிறார். பிரேம்ஜி இசை அமைக்கிறார். கதிர் அரங்கம் நிர்மாணிக் கிறார்.
படம் பற்றி இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், ”ஒடிடியில் இது எனது முதல் படம். மிகச்சிறந்த முறையில் படப்பிடிப்பு தொடங்கி யுள்ளது. கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து அனைவ ரும் அற்புதமாக நடிக்கிறார் கள். வைபவ், வாணிபோஜன், கருணாகரன் மற்றும் என் நண்பர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் இப்படத்தில் கை கோர்ப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’’ என்றார்.
நடிகர் வைபவ் கூறுகையில், ” ‘லாக்கப்’, ‘டானா’, ‘கப்பல்’ போன்ற படங்களுக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தின் மூலம் ஜீ5 உடனான நட்பு தொடர் கிறது. இந்த நகைச்சுவை படத்தில் இதுவரை நான் ஏற்றிராத சவாலான கதாபாத் திரத்தில் நடிக்கிறேன். குடும்ப மாக அனைவரும் ரசித்துப் பார்க்கும்படி எடுக்கப்படும் இப்படத்தில் இயக்குநர் ராதா மோகன், வாணிபோஜன், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் பணியாற்று வதில் மகிழ்ச்சி அடைகி றேன்’’ என்றார்.
நடிகை வாணி போஜன் கூறுகையில், ” ‘ஜீ5 ன் ‘லாக்கப்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் வைபவ் உடன் இணைந்து நடிக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம். நகைச்சுவை மிகுந்த இப்படத்தில் பெண்கள் குறிப்பாக இல்லத்தரசிகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத் தில் நடிக்கின்றேன். ராதா மோகன், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் ஆகியோருடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது.”
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், ‘’இயக்குநர் ராதாமோகன் என்று சொல் வதை விட அவர் என் சகோதரர், என் நலனில் அக்கறை செலுத்துபவர், என்னை ரசிப்பவர், ரசித்துப் பல கதாபாத்திரங்களை உருவாக்குபவர், என்று சொல்லிக்கொண்டே போக லாம். அவரோடு ‘அழகிய தீயே’ படத்தில் இணைந்தேன். அதைத் தொடர்ந்து ‘மொழி’, ‘பிருந்தாவனம்’, ‘காற்றின் மொழி’ இப்படிப் பல படங் களில் நடித்த எனக்கு, இந்த படத்திலும் அவருடன் இணைய வாய்ப்பளித்திருக் கிறார். மற்ற படங்கள் போல் இதிலும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுப்பார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது” என்றார்..
நடிகர் கருணாகரன் கூறுகை யில், ”நான் சமீபத்தில் கேட்ட கதைகளில் இப்படத்தின் கதை மிகவும் ரசிக்கும்படி நகைச் சுவையாக இருந்தது. ‘உப்பு கருவாடு’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் ராதா மோகனுடன் இணைவதில் மகிழ்ச்சி. அதே சமயம் வைபவ், எம் எஸ்.பாஸ்கர், வாணிபோஜன் ஆகியோ ருடன் இணைந்து பணி யாற்றுவதிலும் சந்தோஷம். இப்படத்தின் மூலம் அனை வரையும் மகிழ்விக்க ஆவலாக இருக்கி றேன்” என்றார்.