திரைப்படத் துறையை சேர்ந்த 24 யூனியன்கள் உள்ளடக்கிய அமைப்பு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்ஸி). இதன் தலைவராக ஆர்.கே.செல்வ மணி பொறுப்பு வகிக்கிறார். 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. வரும் 14.2.2021 அன்று தேர்தல் நடக்கிறது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்ர மணியன் தேர்தல் அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அறிவிப்பை பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி சம்மேளனம் சார்பில் வெளியிட்டார். கொரோனா காலகட்டத்தில் திரையுலகினர் பெப்ஸி அமைப்புக்கு யார் யார் எவ்வளவு நிதி வழங்கி னார்கள் என்ற விவரமும் வெளியிடப்பட்டது. அதுபற்றிய முழுவிவரம் வருமாறு:
previous post