இசை அமைப்;பாளர் இசைஞானி இளையராஜா கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசை அமைத்துஇ வந்தார். அங்கிருந்து அவரை பிரசாத் நிர்வாகம் வெளியேற்றியது.
தற்போது இளையராஜா சொந்தமாக ரெகார்டிங் ஸ்டுடியோ கட்டி உள்ளார். அங்கு இன்று இசை பணியை இளையராஜா தொடங்கினார், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் உருவா கிறது. இப்படத்துக்கு இளைய ராஜா இசை அமைக்கிறார். அதற்கான பாடல் பதிவை இளையராஜா இன்று புது ரெக்கார்டி ஸ்டுடியோவில் தொடங்கினார். இதில் சூரி ஜோடியாக ஜி.வி.பிரகஷின் தங்கை பவானிஸ்ரீ நடிக்கிறார்.
போலீஸ் வேடத்தில் சூரி நடிக்க விஜய்சேதுபதி முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு இளையாஜா முதன் முறையாக இசை அமைக்கி றார்.
மேலும் இளையராஜா தற்போது விஜய் சேதுபதி நடிக்க சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.
இளையராஜாவின் நீண்ட கால நண்பர் இயக்குனர் இமயம் பாரதிராஜா புதிய ரெக்கார்டிங் ஸ்டியோ கட்டியுள்ள இளையராஜாவுக்கு நேரில் சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் நடிகர் சூரி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.