அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்தி ருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத் தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்தி ருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசைய மைத்திருக்கிறார். இப்படத்தின் மீடியா, பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
கடாவர்’ படத்தின் தயாரிப்பாளரும், கதையின் நாயகியுமான நடிகை அமலா பால் பேசியதாவது:
”கொரோனா தொற்று பாதிப் பிற்குப் பிறகு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக் கிறேன். ரசிகர்களையும் பார்வையாளர் களையும் நேரில் காணும்போது உற்சாகம் பிறக்கிறது. அபிலாஷ் பிள்ளை பிள்ளையும், இயக்குநர் அனூப் எஸ். பணிக்கரும் என்னை சந்தித்து ‘கடாவர்’ படத்தின் கதையை கூறியதும், என்னுடைய கதாபாத் திரம் புதுமையான தாகவும், வலிமையான தாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண் டேன். பிறகு அவர்கள் தயாரிப்பா ளர்கள் இல்லாமல் கஷ்டப்பட் டதை கண்டு, தயாரிப்பா ளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித் தேன். இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணை யாக திகழ்ந்த என்னுடைய தாயார் மற்றும் சகோதரருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன்.

நான்காண்டு காலம் கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப் படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல வடிவங்களில் தடைகள் உருவானது. இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். கடவுளின் ஆசியாலும், மறைந்த என்னுடைய தந்தையாரின் ஆசீர்வாதத்தினாலும் இந்தியா வின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எங்களின் கடாவர் படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக் கொண்டது. ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ .டி. டியில் ‘கடாவர்’ வெளியாகிறது. பல மெடிக்கல் கிரைம் திரைப் படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளி யானதில்லை. காவல்துறையில் பணியாற்றும் தடய வியல் நிபுணர் வேடத் தில் நான் நடித்தி ருக்கிறேன். ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, பின்னணி இசை என அனைத்து விசயங்களும் நேர்த்தி யாக இருக்கும். ரசிகர்கள் வழக்கம் போல் இந்த ‘கடாவர்’ திரைப் படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள் கிறேன்” என்றார்.
இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர் பேசியதாவது:
2016 ஆம் ஆண்டில் இந்த கதையினை கதாசிரியர் அபிலாஷ் பிள்ளையுடன் இணைந்து திரைக் கதை எழுதினோம். பல்வேறு தயாரிப்பாளர்களை சந்தித்து இந்த கதையை கூறிய போது ஒவ்வொரு வரும் பல ஆலோசனை களை வழங்கி, படத்தின் மைய நோக்கத்தை திசை திருப்பவே முயற்சித்தார்கள். இதனால் சோர்வு ஏற்பட்டது. இந்த தருணத்தில் நண்பர் ஒருவர் மூலமாக அமலா பால் அவர்களை சந்தித் தோம். அவரிடம் கதை யைக் கூறியதும், ‘பிடித்திருக் கிறது. நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு தயாரிப் பாளரை தேடினோம். அமலாபால் நாயகி என்றதும் அவர்களின் எதிர்பார்ப்பு வேறாக இருந்தது. பிறகு ஒரு கட்டத்தில் இந்த படைப்பை நானே தயாரிக்கிறேன் என அமலபால் நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் முதல் இந்த தருணம் வரை அவர் எனக்கு கடவுளாகவே காட்சித் தருகிறார். 2018 ஆம் ஆண்டில் இதற்கான பணிகளை தொடங்கி னோம். இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக படத்தின் பணிகள் மிக மெதுவாக நடைபெற்றது. இருப் பினும் படத்தின் பணி களை நிறைவு செய் தோம். படத்தை வெளி யிட நினைத்தபோது, தவிர்க்க இயலாத பல தர்ம சங்கடங்களை எதிர்கொண்டோம். பிறகு ஒரு வழியாக இந்தியா வின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி ஹாட் ஸ்டார், எங்களது ‘கடாவர்’ திரைப்படத்தினை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட்டு, எங்களது கனவை நனவாக்கியத் துடன், பிரம்மாண்டமாக வெளி யிட்டு எங்களை பெருமைப்படுத் தியிருக்கிறது. இதற்காக நாங்கள் அனை வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கி றோம்.
கடாவர் – ஒரு மெடிக்கல க்ரைம் திரில்லர். காவல் துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் பத்ராவாக நடிகை அமலாபால் அற்புதமான நடிப்பை வெளிப் படுத்தி இருக்கிறார். இந்த கதாபாத் திரத்திற்காக சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் இடம்பெற் றிருக்கும் பிணவறைகளுக்கு நேரடியாக சென்று பார்வை யிட்டார். அவரது கதாபாத்திரம் திரையில் நேர்த்தியாக தோன்று வதற்கு, அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியும் ஒரு காரணம். ”என்றார்.
‘கடாவர்’ பட கதை எழுதிய அபிலாஷ் பிள்ளை பேசியது:
நான் தகவல் தொழில் நுட்ப துறையில் பணி யாற்றினாலும், என்னு டைய கனவு சினிமா தான். 2010 களில் என்னுடைய சகோதரர் இறந்தார். அவரது உடல், உடற் கூறாய்வு செய் வதற்காக பிணவறையில் வைக்கப்பட்டி ருந்தது. அங்கு சென்று பார்வையிட்டபோது தான் இப்படத்திற்கான கதை கரு உருவானது. அதன் பிறகு இயக்குநர் அனூப் எஸ் பணிக்க ருடன் இணைந்து ஓராண்டு திரைக் கதையை எழுதினோம். பிறகு இந்த கதையை அமலா பால் தயாரிக்க விருப்பம் தெரிவித்த போது, எங்களுக்கு இருந்த கவலை அகன்றது. அவர் இந்த திரைப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கினார்” என்றார்.
அனைவரையும் பி ஆர் ஒ ழ்சஸ்ரீவெங்கடேஷ் வரவேற்றார்.
