கொரோனா 2வது அலை வேகமாக பரவு வரும் நிலை யில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. அதில் வழிபாட்டு தலங்கள், திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் ஆண்டாண்டாக நடக்கும் மதுரை அழகர்சாமி ஆற்றில் இறங்கும் விழா சமீபத்தில் வந்தது. லட்சக்கணக்கில் இந்த விழாவில் பக்தர்கள் கூட அவர் களுக்கு அருள்பாலித் தபடி அழகர் வைகை ஆற்றில் இறங்குவார். ஆனால் இம்முறை முற்றிலுமாக பக்தர்களுக்கு தடைவிதிக் கப்பட்டது. மேலும் கோயில் வளாகத்திலேயே அழகர் உலா நடந்ததுடன் அங்கு செயற்கை யாக ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த வைகை ஆற்று நீரில் பச்சைபட்டுத்தி அழகர் இறங்கி நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில்தான் பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் கிம்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இவ்விழாவில் பக்தர்கள் பங்கேற்க காத்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று அதற்கும் இடையூறாக அமைந்திருக் கிறது. பக்தர்கள் இல்லாமல் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத் தல்படி, கொரோனா கட்டுப் பாடுகள் அனைத்தும் பின்பற் றப்பட்டு இன்று (2021ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி) நடக்கும் இவ்விழாவில் கோவில் நிர்வாகத்தினர் மட்டும் கலந்து கொண்டு கும்பாஇஷ்ஹெக்க ஏற்பாட்டுகளை நடத்தினர்.
கும்பாபிஷேக விழா நிகழ்வு நேரடியாக பக்தர்கள் பார்க்க முடியாவிட்டாலும் இணைய வழியில் யூ-டியூப் மற்றும் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப் பட்டது. தருமபுரம் ஆதினத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக விழாவுக்காக 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சென்ற 25 ஆம் தேதி 8 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து இன்று காலை 8 ஆம் கால யாக பூஜைக்குப் பின், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராஜகோபு ரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்ற கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தலவரலாறு:
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தல மாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரி நாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார் கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவர்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட் டுள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந் துள்ள 16வது சிவத்தலமாகும்.
இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீசுவரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது.
வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்து வது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.
இக்கோயிலில் அமைந்தி ருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படு கின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.
வரலாற்று சிறப்பு மிக்க வைத்தீசுவரன் கோயிலின் தோற்றம் சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், தமிழ் கடவுளாம் முருகப் பெருமானும், பூசித்துப் பேறு களைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.
இத்தலத்துச் சிவபெரு மானைப் பற்றிய புகழ்ப் பாக்களில் சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்திகள் உள்ளன.
ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப் பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது. அப்பர் பெருமானின் தேவாரப் பகுதியில் இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும்.
திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதி யுற்றபொழுது அவர் தமக்கை யார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழு திட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்த கோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.