Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு கவர் சாங் பாடி நடித்த நக்ஷா சரண்.. வைரமுத்து வாழ்த்து..

சென்னையை சேர்ந்தவர் நக்ஷா சரண். பாடல்கள் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர், பல வருடங்களுக்கு முன்பு அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் இன்றைய ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வெளிவந்த முதல் திரைப்படமான
ரோஜா படத்தில் இடம் பெற்ற “புது வெள்ளை மழை” எனும்
பாடல் ரொம்பவே ஈர்த்துவிட்டது.

இந்த நூற்றாண்டின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என சிலாகிக்கும் நக்ஷா சரண், தற்போது இந்த பாடலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் புதிய வடிவிலான கவர் சாங் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார்.

தனது வைர வரிகளால் ரசிகர்களை கட்டிப்போட்ட பாடலாசிரியர் வைரமுத்து ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுகொண்டிருக்கும் இந்த கவர் பாடலை யூடியூபில் பார்த்துவிட்டு, நக்ஷா சரணை பாராட்டினார்.

Related posts

தரமான “அக்கா குருவி” ஓடாவிட்டால் சர்ச்சை படம்தான் எடுப்பேன்: இயக்குனர் சாமி பரபரப்பு

Jai Chandran

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிமுக விழா.. டிராஜேந்தர் தலைமையில் புதிய அமைப்பு..

Jai Chandran

இளையராஜா இசையில் ஶ்ரீ ராமானுஜராக நடித்த டி.கிருஷ்ணன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend