Trending Cinemas Now
தமிழ் செய்திகள்

மனிதனைவிட யானைகள் மேல்: நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு.

’காடன்’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய விஷணு விஷால்  மனிதர்களை விட யானையே மேல் என்றார்.

பிரபு சாலன் இயக்கும்  படம் காசன். ,இதில்  விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், ஸோயா ஹுசைன், ஸ்ரேயா பில்கொன்கர் நடிக்கும் படம் காடன். பிரபு சாலமன் டைரக்டு செய்கிறார். ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஷாந்தனு மொய்த்ரா இசை அமைக்கிறார். ஏ.ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

 


இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. படம் குறித்து படக்குழுவினர் பேட்டி அளித்தனர்.
இயக்குனர் பிரபுசாலமன் கூறியதாவது:
சரியாக ஒரு வருடத்துக்குமுன் காடன் பட டீஸர் கொண் டாட்டம் நடந்தது. கொரோ னாவால் அடுத்த ஒரு வருடம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. இப்பட்டத்தில் ராணா, விஷ்ணு தவிர இன்னொரு ஹீரோ இருக்கி றார். அவர்தான் ரசூல் பூக்குட்டி அவ்வளவு அக்கறை எடுத்து இயற்கையின் ஒலிகளை பதிவு செய்து வருகி றார். படத்தை தியேட்டரில் பார்க்கும்போது ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். இன்றைய தின ஸ்பெஷல் என்னவென்றால் இன்று உலக வனவிலங்கு தினம். இன்றைய தினத்தை பார்த்து நாங்கள் இந்த விழாவை ஏற்பாடு செய் யவில்லை. அது தானாக அமைந்தது. இது ஆச்சர்யமான விஷயம். அவைகளுக்காக குரல் கொடுக்க கூட்டம் நாம் இருக்கிறோம். அசாமில் காட்டுபகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவம் ஒரு காட்டை எப்படி கார்ப்பரேட் நுழைந்து ஆக்ரமிக்க முயன் றார்கள், யானையின் வழித் தடங்களை மறைந்து சுவர் கட்டி அதனுடைய இடங் களை சிதைக்க முற்பட்ட போது காஸ்யன்னா என்ற ஒரு இடம் அசாம் பக்கத்தில் உள்ளது. அங்கு ஒரு சமூக ஆர்வலரும் போராளியுமான ஒருவர் இந்த சுவற்றை உடைக்க பாடுபட்டார்.
இது வழகமான படம் கிடை யாது. இந்த படத்துக்காக 4 வருடம் ரானா பணியாற்றி இருக்கிறார். உடம்பு இளைக்க வேண்டும் , ஏற்ற வேண்டும் என நிறைய உழைத்திருக்கி றார். அதேபோல் யானை பாகனாக இந்த படத்தில் விஷ்ணு விஷால் நடித்தார். அதற்காக அந்த யானையுடன் வருடக் கணக்கில் பழகி நடித்தார். ஜோயா, ஸ்ரேயா போன்றவர்களும் தங்களது நடிப்பை வழங்கினார்கள். ஈராஸ் இப்படியொரு சப்ஜெக்டை எடுத்து தயாரித் திருக்கிறார்கள். இந்த கொரோனா காலத்தில் ஏன் இவ்வளவு பாதிக்கப்பட் டோம் என்பதை இப்படம் பேசும். தயாலாந்து, கேராள வில் இதன் படப்பிடிப்பு நடந்தது.
இவ்வாறு பிரபு சாலமன் கூறினார்.
ரானா கூறும்போது, ’நிறைய படங்களில் நடிக்கிறோம் அதில் சில படங்கள் வாழ்வில் மறக்க முடியாதவைகளாக அமைகின்றன. அந்த வகையில் காடன் எனக்கு மறக்க முடியாத படம். இந்த படத்தில் நடித்தது 4 வருட பயணமாக அமைந்து. இந்த பயணத்தில் நான் சில திருப்பங்களை சந்தித்தேன் என் உடல் ஆரோக்கியமும் அதில் ஒன்று’ என்றார்.
விஷ்ணு விஷால் பேசும் போது.’கடந்த இரண்டு மூன்று வருடமாக நடந்த சில நிகழ்வு களை பார்க்கும்போது மனிதர் களைவிட யானைகள் மேல். மனிதர்கள் அப்படி இல்லை. யானைகளுக்கு ஞாபசக்தி அதிகம். யானையுடன் நடித்து 3 வருடம் ஆகிவிட்டது, இப்போதுகூட நான் போய் அதன் எதிரில் நின்றால் நான் யார் என்பது அதற்கு தெரியும் என்னுடன் விளையாட கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் மனிதர்கள் அப்படி இல்லை. யானையா? மனிஷனா? என்று என்னை கேட்டால் யானை தான் பரவாயில்லை என்று நான் சொல்வேன். இந்த படத்தில் எல்லோரும் நிறைய உழைப்பை போட்டிருக்கி றோம். எல்லோரும் இப்படத் துக்கு சப்போட் செய்ய வேண்டும்’ என்றார்.
நடிகைகள் ஜோயா ஹுசைன், ஸ்ரேயா பில்கொன்கெர் உள்ளிட்ட பலர் நடித்துள் ளனர். அனைவரையும் நிகில் முருகன் வரவேற்றார்.

Related posts

பிரபுதேவாவின் ‘பகீரா’வின் நாயகிகள்

Jai Chandran

ஜோ: ரியோ ராஜ் ஜோடியாக மலையாள நடிகை மாளவிகா மனோஜ்

Jai Chandran

கங்குவா எதிர்மறை விமர்சனம் புறந்தள்ளுங்கள்: ஜோதிகா பரபரப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend