Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜய் அமைச்சரவை விரிவாக்கம்: செங்கோட்டையன் பதவி பறிப்பு..

2026 ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. 118 தொகுதிகள் இடம் பெற்றால் தான் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் 108 தொகுதியில் மட்டுமே பெற்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மாற்றுக் கட்சியில் அதாவது திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது.

பின்னர் முறைப்படி தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக கவர்னர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் அவருடன் மேலும் செங்கோட்டையன், ராஜ்மோகன், புஸ்ஸி ஆனந்த், ஆதார் அர்ஜுனா உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். த வெ கவுக்கு ஆதரவளித்த மற்ற கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்க விஜய் முடிவு செய்து அறிவித்திருந்த நிலையில் இன்றைய தினம் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை
விரிவாக்கம் நடைபெற்றது.

இதில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் ஆனதுடன் மேலும் பல த வெ க எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.

காங்கிரஸ் இதற்கு முன்பு 59 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் அமைச்சர் பதவி வகித்த நிலையில் மீண்டும் இப்போதுதான் அவர்கள் அமைச்சர்களாக வர முடிந்திருக்கிறது என்பது பேசும் பொருளாகி யிருக்கிறது.
புதிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அதன்படி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் வருமாறு:

அமைச்சர் செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

அமைச்சர் ஸ்ரீநாத் – மீன்வளத்துறை

அமைச்சர் கமலி – கால்நடைத்துறை

அமைச்சர் விஜயலட்சுமி – பால்வளத்துறை

அமைச்சர் ரஞ்சித் குமார் – வனத்துறை

அமைச்சர் வினோத் – வேளாண்துறை

அமைச்சர் ராஜிவ் – சுற்றுச்சூழல் துறை

அமைச்சர் ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை

அமைச்சர் காந்திராஜ் – கூட்டுறவுத்துறை அமைச்சர் மதன்ராஜ் – சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை

அமைச்சர் ஜெகதீஷ்வரி – சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை காங்கிரஸ்

அமைச்சர் கிள்ளியூர் ராஜேஷ்குமார் – சுற்றுலாத்துறை

அமைச்சர் விஜய் பாலாஜி – கைத்தறித்துறை

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை

அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துத்துறை

அமைச்சர் ரமேஷ் – அறநிலையத்துறை காங்கிரஸ்

அமைச்சர் விஸ்வநாதன் – உயர்கல்வித்துறை

அமைச்சர் குமார் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை

அமைச்சர் தென்னரசு – வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை

அமைச்சர் சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

அமைச்சர் முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை

அமைச்சர் சரத்குமார் – மனிதவள மேலாண்மைத்துறை

அமைச்சர் விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை

அமைச்சர் மரிய வில்சன் – நிதித்துறை

அமைச்சர் அருண்ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.

ஏற்கனவே நிதி அமைச்சர் பொறுப்பு செங்கோட்டை யனுக்கு விஜய் அளித்திருந்தார் ஆனால் தற்போது நிதித்துறை பொறுப்பை அவரிடமிருந்து பறித்து புதிதாக பதவி பொறுப்பு ஏற்றுக் கொண்ட அமைச்சர் மரிய வில்சனிடம் நிதி அமைச்சர் பொறுப்பை ஒப்படைத்தார். இது செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவரிடம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரவை பொறுப்பு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் த வெ க கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி , முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படுவது அடுத்து விசிக சார்பில் வன்னியரிசு மற்றும் முஸ்லிம் சார்பில் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்க உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பொறுப்பில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறது

இந்த அமைச்சரவை விரிவாக்கம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Related posts

கொரோனா நிதி 2வது தவணை எப்போது, ஊரடங்கு நீடிப்பா?

Jai Chandran

வெங்கட்பிரபு, நாக சைதன்யா இணையும் இருமொழிபடம்

Jai Chandran

Bucks talk about Kadaisi Vivasayi!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend