Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

த வெ க அதிக இடங்களில் வெற்றி :விஜய் தமிழக முதலமைச்சர் ஆகிறார்..

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​யின் தவெக அதிக தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்க உள்​ளார். கொளத்​தூர் தொகு​தி​யில் தொடர்ந்து மூன்று முறை​யாக வெற்றி பெற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இத்​தேர்தலில் தோல்​வியடைந்​தது திமுக​வினரிடம் அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தனது எடப்​பாடி தொகுதியில் வெற்​றியை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளார். காரைக்குடி​யில் போட்​டி​யிட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட அக்​கட்சி வேட்​பாளர்​கள் அனை​வரும் டெபாசிட் இழந்​துள்​ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​தி​களி​லும் ஒரே கட்டமாக கடந்த ஏப்​.23-ம் தேதி நடந்​தது. இதில் திமுக, அதி​முக, தவெக, நாதக ஆகிய கட்​சிகள் இடையே நான்​கு ​முனைப் போட்டி நில​வியது. இதை எடுத்து மே 4ஆம் தேதி தமிழக முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் தேர்​தல் முடிவு​கள்  அறிவிப்பு வெளியாக தொடங்கியது.. வாக்கு எண்​ணிக்கை தொடங்​கியது முதலே முன்​னிலை​யில் இருந்து வந்த தவெக, 107 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது.

திமுக கூட்டணி 74 தொகுதிகள்
அதிமுக கூட்டணி 53 தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளன.
நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தாலும்  தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது. ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலமான 118 இடங்​களைப் பெறாத​தால், தமிழகத்​தில் தற்​போது ‘தொங்கு சட்​டப்​பேர​வை’ அமை​யும் சூழல் உரு​வாகி​யுள்​ளது. ஆட்சி அமைக்க இன்​னும் 10 இடங்​கள் தேவைப்​படு​வ​தால், கட்​சிகளிடம் ஆதரவு கோரு​வது குறித்து கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய் தீவிர ஆலோசனை​யில் ஈடு​பட்​டுள்​ளார்.

தவெக முன்பு இரண்டு வாய்ப்​பு​கள் உள்​ளன. ஒன்று அதிமுக​வின் ஆதர​வைக் கோரு​வது. மற்​றொன்​று, திமுக கூட்டணிக் கட்​சிகளின் ஆதரவை கோரு​வது. அதி​முக தலைமையிலான கூட்​டணி 53 இடங்​களை கைப்​பற்​றி​யுள்​ளது.

ஒரு​வேளை அதி​முக ஆதரவு அளித்​தால் தவெக மிக எளி​தாக ஆட்சி அமைக்க முடி​யும். அப்படியே ஆதரவு அளித்தாலும் அவர் தனக்கு முதலமைச்சர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதை விஜய் ஏற்பதாக இல்லை. நான் கிங் மேக்கர் இல்லை நான் தான் கிங் என்று விஜய் ஏற்கனவே பிரச்சாரத்தின் போது  கூறியிருக்கிறார் அதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதவியை அவ்வளவு எளிதாக விஜய் விட்டுக் கொடுப்பார் என்று கூற முடியாது. மேலும்
அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை விஜய் கடுமை​யாக விமர்​சித்துப் பேசினார். இந்த சூழலில், தற்போது பழனி​சாமி ஆதரவு அளிப்​பாரா என்​பது தெரிய​வில்​லை.

மற்​றொருபுறம், திமுக கூட்​ட​ணி​யில் உள்ள காங்​கிரஸ், விசிக மற்​றும் கம்யூனிஸ்ட் கட்​சிகளின் ஆதர​வைப் பெற​வும் விஜய் திட்​ட​மிட்டு வரு​கிறார்.

இதற்​கிடையே, தவெக​வின் வெற்​றிக்கு வாழ்த்து தெரி​வித்​துள்ள காங்​கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்​தி, தொலைபேசி வாயி​லாக விஜய்​யைத் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் கட்சிகளிடையே தொடர்ந்தாலும் விஜய் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் பதவி ஏற்பது உறுதி என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் கவர்னர் முன்னிலையில் அவர் ஆட்சி அமைப்பதற்கு போதிய எண்ணிக்கையிலான 118 என்ற எண்ணிக்கையை நிரூபித்தால் மட்டுமே அவர் தொடர்ந்து முதலமைச்சராக நீடிக்க முடியும் அல்லது தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மக்கள் தீர்ப்பை ஏற்கனவே  நாங்கள் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறி இருக்கிறார்.

நடிப்​பில் இருந்து அரசி​யலுக்கு மாறி, தவெக கட்​சி​யைத் தொடங்கிய விஜய், களம்​கண்ட முதல் தேர்​தலிலேயே எந்த கட்சியுட​னும் கூட்​டணி சேராமல் தனித்​துப் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றுள்​ள​தால், அக்​கட்​சி​யினர் மிகுந்த உற்​சாகம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ள விஜய்க்கு அனைத்து கட்சி தலைவர்களும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்களும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

 

Related posts

நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது

Jai Chandran

Atlee’s presents ‘VD18’ starring Varun Dhawan

Jai Chandran

உடற்கல்வி ஆசிரியராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend