Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் நாளை வெளியிடும் ‘நாற்காலி’ பட ஆடியோ

இயக்குனர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’. ‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.’இருட்டு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக வி.இசட்.துரை இந்த ‘நாற்காலி’யை இயக்கியுள்ளார்.

இதில் அமீருடன், ‘555’ திரைப்படத்தின் நாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் பாடும் ‘நாற்காலி’ திரைப்படத்தில் மறைந்தும் மறையாத “பாடும் நிலா” எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில் புரட்சித் தலைவரின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு…” என்ற வரிகளில் தொடங்கும் பாடலின் “FIRST SINGLE”- track ஐ புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 104-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 16-ம் தேதி மாலை மாண தமிழக முதல்வர்
எடப்பாடி கே. பழனிசாமி  வெளியிட அமைச்சர்  கடம்பூர் ராஜூ  பெற்றுக்கொள்கிறார்.

இத்திரைப்படத்தின் இசை அமைப்பை வித்யாசாகர், ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பை ஆர்.சுதர்சன், பாடல் பா விஜய், வசனம் அஜயன் பாலா – க.முரளி, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து, சண்டைக்காட்சிகளை டான் அசோக், நிழற்படப்பதிவை மோதிலால், விளம்பர வடிவமைப்பை ராஜா – வெங்கடேஷ், மக்கள் தொடர்பு கே.எஸ்.கே செல்வா ஆகியோர் செய்துள்ளனர்.

மிகுந்த பொருட் செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றிருக்கிறது.

இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவேகத்துடன் நடந்து வருகிறது. அனைத்து ரசிகர்களும் இன்புற்று மகிழ்ந்து அமரவிருக்கும் வகையில் உருவாகி வரும் இந்த ”நாற்காலி” யை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்

Related posts

Radikaa Sarath receives achievement award in UK Parliament*

Jai Chandran

திறந்தவெளியில் மழையில் வீணாகும் நெல்!

Jai Chandran

சீதா ராமம் ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend