Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் (பட விமர்சனம்)

படம்: சிங்கப்பூர் சலூன்

நடிப்பு: ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி சவுத்திரி,  கிஷன் தாஸ், அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய் ஜி மகேந்திரன், கெஸ்ட் ரோல்  அரவிந்த்சாமி, ஜீவா லோகேஷ் கனகராஜ்

தயாரிப்பு: வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி  கணேஷ்

இசை: விவேக் மெர்வின், ஜாவித் ரியாஸ்

ஒளிப்பதிவு: எம்.சுகுமார்

இயக்கம்: கோகுல்

ஊரில் சாச்சா லால் சலூன் கடை வைத்திருக்கிறார். அவரிடம் தன் நண்பனுடன் சேர்ந்து சிறுவயதில் குறும்புத்தனம் செய்கிறார் ஆர் ஜே பாலாஜி. பைத்தியம் ஒருவரை கல்லிலடித்து சிறுவர்கள்  துரத்து கின்றனர். சிறுவர்களை விரட்டி விட்டு தனது சலூன் கடைக்கு பைத்தியக்காரனை அழைத்து செல்கிறார் லால். சிறிது நேரத்தில் அந்த பைத்தியக்காரனுக்கு சிகை அலங்காரம் செய்து அழகு ததும்பும் வாலிபனாக மாற்றி அழைத்த வருகிறார். அதைப் பார்த்து ஆர்.ஜே. பாலாஜி வியக் கிறார். ஹேர் ஸ்டைல் மூலம் ஒரு ஆளின் தோற்றத்தையே மாற்ற முடியும் அதனால் அந்த நபருக்கு மரியாதை கூடும் என்பதெல்லாம் கண்கூடாக பார்க்கும் ஆர் ஜே பாலாஜி. வளர்ந்த பின் தானும் சிகை அலங்கார நிபுணராக மாற முடிவு செய்கிறார். கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்த பிறகு தன் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தும் அதை உதறிவிட்டு சலூன் கடை வைக்க முடிவு செய்கிறார். சலூன் கடை என்றால் சாதாரணமாக அல்ல, ஹை கிளாஸ் சலூன் கடையாக அதை ஆரம்பிக்க நினைத்து கடன் வாங்கியும் வேறு வழியியிலும் பணத்தை திரட்டி சிங்கப்பூர் சலூன் என்ற நவீன கடையை
அமைக்கிறார். ஆனால் அதற்கு பல்வேறு தடைகள்,  இடைஞ் சல்கள் வருகின்றன. ஒரு கட்டத்தில் அந்த சலூன் கடையை இடிக்க கோர்ட் உத்தரவு வருகிறது. அதைக் கண்டு அதிர்ந்தாலும் அந்த சிக்கலில் இருந்து ஆர்.ஜே பாலாஜி எப்படி எஸ்ஸாகிறார், தான் நினைத்த லட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதை சொல்வதே சிங்கப்பூர் படத்தின் கிளைமாக்ஸ் ஆக அமைகிறது.

பாலாஜி குறைந்த அளவிலான படங்களிலேயே நடித்தாலும் ஒவ்வொரு கதையையும் தனக்கு ஏற்ற வகையிலேயே தேர்வு செய்து நடித்து வருகிறார் அதனால் தான் அவரது படங்கள் அவருக்கு வெற்றியை தருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூர் சலூன் படமும் ஆர் ஜே பாலாஜிக்கு ஏற்ற கதையாகவும் அவருக்கு மற்றொரு வெற்றி தேடித் தரும் படமாகவும் அமைந்திருக்கிறது எனலாம்.
சலூன் கடை நடத்தும் லாலை சிறுவயது ஆர் ஜே பாலாஜி மற்றும் அவரது தோழரும் செய்யும் குறும்பு களை தமாஷாக சமாளித்து பின்னர் அவர்களின் மனதில் லால் இடம் பெறும்போது ரசிகர்கள் மனிதிலும் இடம்பெறும் ஒரு கதாபாத்திரமாக  அமைந்தி ருக்கிறது. இந்தப்  பாத்திரத்திற்கு இவர் தான் பொருத்தமாக இருப் பார் என்பதை இயக்குனர் எப்படித் தான் முடிவு செய்தாரோ தெரிய வில்லை அவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறார் லால்.
ஆர் ஜே பாலாஜி,  தான் சலூன் கடை வைக்கப் போவதாக தந்தை யிடம் சொல்லும்போது,’ சலூன் ஒரு பரம்பரை தொழில்,  நீ என்ஜினிய ராகத்தான் ஆக வேண்டும்”  என்று கூற அதற்கு ஆர் ஜே பாலாஜி பதிலடியாக “என்ஜினியர் மட்டும் என்ன நம்முடைய பரம்பரை தொழிலா?” என்று கேட்பது பிற்போக்கு வாதிகளுக்கு  தரும் சவுக்கடி.

சலூன் கடை வைத்திருப்பதால் தனது காதலி கூட தன்னை விட்டு பிரிந்து செல்வதை கண்டு மனம் உடையும் ஆர் ஜே பாலாஜி பிறகு தந்தையின் சொல்லைக் கேட்டு தன்னைப் பிடித்த ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்க்கை நடத்த தொடங்குவது எதார்த்த மான காட்சிகள்.

பெண்ணின் தந்தையாக வருகிறார் சத்யராஜ். இதில் அலப்பறை என்னவென்றால் கடந்த சில வருடங்களாக அவரிடம் பார்க்க முடியாமலிருந்த லொள்ளு இந்த படத்தில் கொடிகட்டி பறக் கிறது. முதல் பாதி வரை அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் சீனுக்கு சீன் கைதட்டல்தான். “உனக்கு தொழில் செய்ய பணம் தருகிறேன்”  என்று கூறி செக்கை எடுத்து வரச் சொல்லி அதில் 300 ரூபாய் எழுதி கொடுக்கும்போது கஞ்சத்திலும் கஞ்சம் வடிகட்டிய கஞ்சம் என்பதை காட்டி ரசிகர் களை மூச்சு திணற சிரிக்க வைக்கிறார் சத்யராஜ்.

நான்கு பீர் குடித்து பாத்ரூம் போகாமல் இருந்தால் அவருக்கு பெரிய விஸ்கி பாட்டில் கிடைக்கும் என்று ஒ.ஜி மகேந் திரன் சொல்ல அதைக் கேட்டு சத்யராஜ் ஒரு பாருக்கு சென்று நான்கு பீரை  மூக்குமுட்ட குடித்து விட்டு அவசரத்தை அடக்க முடியாமல் டாய்லெட்டுக்கு ஓடுவதும் , பின்னர்  தரும் பில்லை பார்த்து கதறியபடி மருமகன்களிடம் சென்று முறையிடுவதும் கலகலப்பு .
முதல் பாதி முழுவதும் கலகலப்பி லேயே படம் சென்றாலும் இரண் டாம் பாதி ஒரு முக்கிய கட்டத்தை நோக்கி படத்தின் கதை நகர்கிறது ஆர் ஜே பாலாஜி எப்படி சலூன் கடை திறக்கிறார் என்பது ஒரு பகுதி என்றால் அந்த கடைக்கு வரும் இடைஞ்சல்கள் எதிர்பார்க் காததாக அமைகிறது.

சதுப்பு நிலத்தில் கடையை கட்டி இருப்ப தாக கூறி அதை இடிப்ப தற்காக அதிகாரிகள் வருவதும் அப்போது அந்த கடையை காப்பாற்ற அப்பகுதியில் உள்ள மக்கள் திரள்வதும் அதற்கு முன்ன தாக கிளிக்கூட்டம் திரண்டு வந்து போராடுவதும் சிலிர்க்க வைக்கும் கிளைமாக்ஸ் காட்சி.
ரோபோ சங்கர் சத்யராஜின் மூத்த மருமகனாக வந்து அவ்வப்போது சத்யராஜஜை பார்த்து கமெண்ட் அடித்து சிரிக்க வைக்கிறார்.

ஜான் விஜய் வில்லத்தனத்தை கட்டவிழ்த்து விடப்போகிறார் என்று பார்த்தால் வில்லனே இல்லாமல் கதையை நகர்த்துவது வித்தியாசமான பார்வை. .

கெஸ்ட் ரோலில் அரவிந்த் சாமி, ஜீவா, லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளது சர்ப்ரைஸ்

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர் நேஷனல்   சார்பில் ஐசரி  கணேஷ் தயாரித்திருக்கிறார்.

பாடல் இசையை விவேக் மெர்வின், பின்னணி இசையை ஜாவித் ரியாஸ்  காதை செவிடாக் காமல் அளவுடன் அமைத்திருக் கின்றார்கள்.

எம்.சுகுமார் கேமிரா காட்சிகளை பளிச்சென பதிவு செய்திருக் கிறது.

இயக்குனர் கோகுல்  அடிதடி,, குத்து வெட்டுக்களை நம்பாமல்  கிளிகளின் போராட்டத்தை நம்பி கிளைமாக்ஸ்  அமைத்திருப்பது  சென்டிமென்ட் டச்சுடன் ஒர்க் அவுட் ஆகிறது. ஆனால் சலூன் கடை வைத்தாலும் பிழைக்க முடியும் என்பதற்கு இவ்வளவு கஷ்டப்பாடு பட வேண்டி இருக்கிறது என்று நீட்டி முழக்கி சொல்வது எத்தனை பேரை  ஈர்க்குமோ தெரியவி ல்லை.

சிங்கப்பூர் சலூன் –  காமெடி சென்டிமென்ட் சீசர் கட்டிங்.

.

 

Related posts

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஏப் 8முதல் விக்ரம் பிரபுவின் “டாணாக்காரன்”

Jai Chandran

CutePonnu from #EnnaSollaPogirai is now streaming!

Jai Chandran

நடிகர் சந்திரபாபு வாழ்க்கை படமாகிறது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend