படம்: பூமி
நடிப்பு: ஜெயம் ரவி, நிதி அகர்வால், ராதாரவி, ரோஹித் ராய், தம்பி ராமையா, சரண்யா, சதிஷ், ஜான் விஜய்,ஜி மாரிமுத்து,
தயாரிப்பு: சுஜாதா விஜயகுமார்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: டுட்லே
இயக்கம்: லக்ஷ்மன்
ரிலீஸ்; டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்
நாசா விஞ்ஞானி ஜெயம் ரவி செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தேர்வாகி அதற்கான பயிற்சி யில் இருக்கிறார். ஒரு மாத விடுமுறையில் தனது தாய் சரண்யாவுடன் திருநெல்வேலி யில் உள்ள கிராமத்துக்கு வரு கிறார். ஊரில் விவசாயம் செய்து வரும் தம்பி ராமையா வயலில் பயிர்கள் கருகியதால் அதற்கு கலெக்டரிடம் இழப்பீடு கேட்கிறார். சக விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் செய்கிறார். அவர்களை போலீஸ் லட்டி சார்ஜ் செய்து விரட்டியடிக் கின்றது. அதைக்கண்டு கோபம் அடைகிறார் ஜெயம் ரவி. விவசாயிகளுக்காக கலெக்டரை சந்தித்து பேச வருகிறார். அப்போது கலெக்டர் ஆபிஸ் முன் உடலில் மண்ணென்னை ஊற்றி தீவைத்துக்கொள்கிறார் தம்பி ராமையா. அதைக்கண்டு பதறும் ரவி அவரை காப்பாற்ற முயல அது பலன் அளிக்கவில் லை. விவாசாயிகளின் கஷ்டத்தை போக்க தனது நாசா வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிராமத்திலேயே தங்கி இயற்கை விவசாயம் செய்ய முடிவு செய்வதுடன் அதில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று நிரூபிக் கிறார். அதைக்கண்டு கோபம் அடையும் கார்ப்பரேட் அதிபர், ரவியை மிரட்டி பணிய வைக்க பார்க்கிறார். அவருக்கு சவால் விடும் ரவி ஒரு வருடத்தில் இந்த நாட்டி லிருந்து உன்னை விரட்டுகி றேன் என்கிறார். இதில் அவரல் ஜெயிக்க முடிந்ததா என்பதற்கு படம் விறுவிறுப் பாக பதில் சொல்கிறது.
ஜெயம் ரவி இதுவரை ஏற்காத விஞ்ஞானி மற்றும் விவசாயி கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். விவசாயி கதாப்பாத்திரத்தில் நன்றாக ஆராய்ந்து அடியெ டுத்து வைத்திருக்கிறார். தம்பி ராமையாவை போலீஸ் தாக்கும்போது தொடங்கும் ஜெயம் ரவியின் போராட்டம் கார்ப்பரேட் முதலாளியை கோர்ட்டுக்கு இழுக்கும்வரை வேகமாக தொடர்கிறது. இயற்கையான முறையில் விவசாயம் செய்து அதில் மாதத்துக்கு ஒரு லட்சம் சம்பாதித்து அரசுக்கு வரிகட்ட லாம் என்று மந்திரி ராதாரவி யிடம் சவால் விடும் ஜெயம் ரவி அதற்கான அவர் செயல் பாடுகளில் இறங்குவது காட்சி யை நம்மும்படி செய்கிறது. நாட்டு மாடு, நாட்டு ஆடு நாட்டு கோழிகளை வாங்கி வந்து அவற்றிலிருந்து வரும் உரத்தை இயற்கையாக பதப்படுத்தி அதை வயலுக்கு பயன்படுத்துவது இன்றைக்கு உரத்தை நம்பி உழுது கொண்டிருக்கும் விவசாயிக ளுக்கு சரியான பாடம். இயற்கை விவசாயத்தில் லாபம் பார்த்தால் தனது கம்பெனிக்கு ஆபத்து வந்து விடும் என்று எண்ணும் கார்ப் பரேட் முதலாளி ரோஹித் ராய் ஜெயம் ரவி விவசாயத்தால் வைரஸ் பரவுகிறது என்ற புரளியை கிளப்பி விட்டு அவரது பயிர்களை அழிக்க முற்படுவதும், அதை அழிக்க வரும் அதிகாரிகளை ஜெயம் ரவி ஆவேசம் பொங்க அடித்து துவசம் செய்வதும் அதிர்வேட் டாக பரபரக்கிறது.
கார்ப்ரேட் முதாலாளி ரோஹித் ஜெயம் ரவியை கட்டிவைத்து மிரட்டும்போது கோபம் அடையும் ரவி ’என்னை இப்ப கொன்னுடு இல்லன்ன உன்ன ஒரு வருடத்திலே இந்த நாட்ல இருந்து ஓடவைப்பேன்’ என்று கண்களில் அனல் பொறி பறக்க எச்சரிக்கும் போது மிரள வைக்கிறார்.
இயற்கை விவசாயம் செய்து அதையே கார்ப்ரேட் நிறுவனம்போல் நடத்த முடியும் லாபம் பார்க்க முடியும் என்று வாய்சொல் லாக இல்லாமல் காட்சிக்கு காட்சி தீர்வுகளை சொல்லி இருக்கும் இயக்குனர் லக்ஷ்மன் ஒரு விவசாய ஆராய்ச்சியையே செய்திருக்கி றார்.
விளைந்த பொருட்களை மார்க்கெட்டுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பியதும் சிறிது நேரத்தில் அந்த லாரிகள் எல்லாம் வேலை நிறுத்தம் என்று காரணம் காட்டி திரும்பி வருவதும் பிறகு அந்த சரக்குகளை ரவியே கடை களுக்கு டெம்போ, டிரை சைக்கிளில் எடுத்து சென்று கொடுக்க அதை கடைக் கார்கள் வாங்க மறுத்ததும் வாகனங்களையே கடைகளாக மாற்றுவதுமாக அடுத்டுத்து வரும் டிவிஸ்ட், காட்சிகளை சுவராஸ்யாமாக்குகிறது.
நிதி அகர்வால் அழகாக வருகிறார். ரவியுடன் டூயட் பாடுகிறார். சில காட்சிகளில் நடிப்பையும் வெளிப்படுத் துகிறார்.
சுஜாதா விஜயகுமார் ஒரு தரமான படத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றே இப்படத்தை தயாரித்திருக் கிறார். லக்ஷ்மன் காதல் காட்சிகலை ஓரம் கட்டிவிட்டு முழுக்க முழுக்க விவசாயித் துக்கு காத்திருக்கும் பேராபத் தை பட்டவர்தனமாக்கி இருக்கிறார். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்கும் இந்த நேரத்தில் இப்படம் வெளி யாகி இருப் பது போராட்டத் துக்கு வலு சேர்க்கும், முடிந்தால் இப்படத்தை போராட்ட முனைவரை கொண்டு செல்ல வேண்டும். டி.இமான் இசை யில் வழக்கம்போல் மெலடி மெட்டாக ஒலிக்காமல் வந்தே மாதரம், தமிழன் என்று சொல்லடா என்று வேகமான பாடல்களை வழங்கி வேறு களத்தில் பயணித்திருக்கிறார்.
பூமி- பூமிக்கு வாய் இருந்தால் என்ன பேசுமோ அதை படம் பேசுகிறது.