Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினி, கமல், விஜய். அஜீத் வாக்கு பதிவு: சைக்கிளில் வந்த நடிகர்

தமிழக சட்டமன்றத்தேர்தல் இன்று 2021ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது.  திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம்,  அமமுக,  நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நடக்கிறது
தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் முடிந்தது. இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வமாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி யில் காலையிலேயே வாக்களித்தார்.  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எல்டாம்ஸ் சாலையில் உள்ள பள்ளியில் வாக்கு பதிவு செய்தார்.


நடிகர்கள் சிவகுமார் சூர்யா.  கார்த்தி தி நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் வாக்களித்தனர்.  மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தார்.  மேலும் பல பிரபலங் கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நீலங்கரையில் உள்ள வாக்குசாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித் தார். நடிகர் அஜீத் மனைவி ஷாலினியுடன் திருவன் மியூரில் வாக்கு பதிவு செய் தார். மேலும் நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு, சிவகார்த்தி கேயன், சசிகுமார், அமீர், குஷ்பு, நமீதா,  ஸ்ருதி ஹாசன், அக்‌ஷராஹாசன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பெரும்பாலான நடிகர், நடிகைகள் காலையி லேயே வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
விஜய் சைக்கிளில் வந்தபோது அவரை பிந்தொடர்ந்து போலீசார் வாக்கு சாவடி வரை வந்தனர். அஜீத் மனைவி ஷாலினியுடன் வாக்கு சவடிக்கு வந்தபோது ரசிகர்கள் அஜீத்துடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அதை அஜீத் தடுத்தார். ஒருவரிடமிருந்து செல்போனை பிடுங்கினார். கூட்டம் அதிகமாக சேர்ந்த தையடுத்து அவர்கள் கலைந்து செல்லும்படியே அஜீத்தே சைகை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். பின்னர் போலீசார் வந்து அஜீத்துக்கு பாதுகாப்பாக நின்றனர்.

Related posts

அமீரின் உயிர் தமிழுக்கு படம் வெளியிடும் சுரேஷ் காமாட்சி

Jai Chandran

நாமக்கல் எம்.ஜி.ஆர் பட டிரெய்லர் சத்யராஜ் வெளியிட்டார்.

Jai Chandran

Vikram Prabhu starrer “TAANAKKARAN” on Disney+ Hotstar from April 8th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend