Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியுடன் பரிசீலனை: அமைச்சர் உறுதி

தமிழ் திரைப்பட பத்திரி கையாளர்கள் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியோடு பரிசீலிக் கப் படும்  என்று அமைச்சர் சாமிநாதன் சங்க விழா வில் கலந்து கொண்டு பேசினார்

தமிழ் திரைப்பட பத்திரி கையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெகு விமர்சையாக சென்னை பிரசாத்  லேபில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன்  கலந்து கொண்டார். தமிழ் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சங்க செயலாளர் ஆப்ரகாம் வரவேற்று பேசினார். சங்க தலைவர் கவிதா தலைமை உரையாற்றி சங்கம் சார்பில் அமைச் சரிடம் கோரிக்கை வைத் தார்.

அவர் கூறும்போது, “சங்க செயல் பாடுகள் குறித்தும், மேலும் திரைப்பட பத்திரி கையாளர்கள் நலனுக்காக செய்தித் துறை தரப்பிலும் செயல் திட்டங்கள் உருவாக்க வேண்டும். என்னும் வேண்டுகோளை யும் முன்வைத்தார்.

பின்னர் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலரை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.தொடர்ந்து தீபாவளி மலரில்  தங்களது பங்கை அளித்த சங்க உறுப்பினர் களுக்கும், விளம்பரங்கள் உதவியில் பங்கு கொண்ட உறுப்பினர்களுக்கும் அமைச்சர் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மூத்த உறுப்பினர் களுக்கு தீபாவளி பரிசு பொருட்களையும் அமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து  செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்  பேசியது:

தமிழ் திரைப்பட பத்திரிக் கையாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் இந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள் வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் திரைப்பட பத்திரி கையாளர்கள் சங்கம் சார்பாகவும் தமிழ் திரைப் பட நிகழ்வுகள் சார்பா கவும் பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை. இந்த நிகழ்விலாவது நிச்சயம் கலந்து கொள்ள வேண் டும் என்கிற நோக்கத் துடன் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண் டுள்ளேன். தமிழ் திரைப் படத்தின் மூலம் தனது பயணத்தை துவங்கி இன்று விளையாட்டு நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளை பெற்று திரைப்படத்துறையில் ஏராளமான செயல் திட்டங்கள், கோரிக்கைகள் என நிறைவேற்றப்பட்டுள் ளன. இன்று தமிழ் திரைப்பட பத்திரிகையா ளர்கள் சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கை களும் செய்தியாளர்க ளுக்கான நலனில் தேவைப்படும் செயல் திட்டங்களும் கூடிய விரைவில் முதலமைச்சர் அவர்களின் ஆலோசனை படியும் விரைவில் நிறை வேற்ற ஆவண செய் வோம். என்னை இந்த விழாவிற்கு அழைத்த மைக்கு மிக்க நன்றி.

இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் பேசினார்

விழாவை சிறப்பாக  ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கினார். முடிவில் சங்க துணை தலைவர் ராதா பாண்டியன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியின் சிறப்பாக துவக்கத்தில் ராக்கிங் லேடிஸ் பேண்ட் குழுவின் இசை நிகழ்ச்சியுடன் நடந்தது.

மக்கள் தொடர்பாளர்கள் நல சங்க முன்னாள் தலைவர் டைமண்ட் பாபு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.  விழா நிறைவாக சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும்  தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Related posts

ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்.

Jai Chandran

Phenomenal star-cast which made Jai Bhim the finest social drama

Jai Chandran

Suniel V Shetty as Chandroth Panicker

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend