Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துரிதம் (பட விமர்சனம்)

படம்: துரிதம்

நடிப்பு: சண்டியர் ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பால சரவணன், பூ ராமு,  ராமசந்திரன், வைஷாலி, ஶ்ரீ நிகிலா,  ஐஸ்வர்யா,

தயாரிப்பு: திருவருள் ஜெகன்.

இசை: நரேஷ்

ஒளிப்பதிவு: வாசன், அன்பு டென்னிஸ்.

இயக்கம்: சீனிவாசன்

பி ஆர் ஒ: கே எஸ் கே.செல்வா

டிராவல்ஸ் டிரைவர் மாரிமுத்து  (சண்டியர் ஜெகன்) ஐடியில் வேலை செய்யும்  வானதி (ஈடன்) மற்றும் தோழிகளை தினமும் அலுவலகத்தில் கொண்டு சென்று விடுகிறார். வானதி அழகில் மயங்கும் மாரிமுத்து அவளை காதலிக்கிறான். ஆனால் வானதி தந்தைக்கு பயந்தவள். அவளை வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு வரச் சொல்கிறார். அவளும் அதேபோல் செய்கிறாள். கடைசியாக தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு வீட்டுக்கு புறப்பட எண்ணும்போது ரயிலை மிஸ் செய்கிறாள்.  பஸ்ஸில் டிக்கெட் கிடைக்காத நிலையில் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் மாரிமுத்துவுடன்  ஊருக்கு புறப்படு கிறாள். அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்கிறது. அது என்ன என்பதை மோட்டார் சைக்கிள் பயணம் சொல்கிறது.

சாலை பயண கதையாக உருவாகியிருக்கிறது துரிதம். பார்க்க  விஜயசேதிபதிபோல் இருக்கும் சண்டியர் ஜெகன் நடிப்பிலும் ஓரளவுக்கு அவரது சாயலை பிரதிபலிக்கிறார். நெடு நெடுவென வளர்த்தியாக இருக்கும்  ஜெகன் ஹீரோயின் ஈடன் மற்றும் அவரது தோழிகள் இழுத்த  இழுப்புக்கெல்லாம் தலையாட்டுவதும்  ஈடன் உடல் ஊரசாமல் பைக்கில் கூட்டிச் செல்வது ஹீரோவின் காதல்  கண்ணியத்தை காக்கிறது.

நடுவழியில் பைக் பஞ்சர் ஆனதும் காரில் லிப்ட் கேட்டு ஈடன் ஏறி அமர்ந்ததும் அவரை கார் டிரைவர் கடத்தி செல்ல செய்வதறியாது ஜெகன் தவிப்பதும் பின்னர்  அவரை தேடி கண்டுபிடிக்க சேசிங் தொடங்குவதும்  விறுவிறுப்பை கூட்டுகிறது.

பெரிய ஆக்ஷன் காட்சி வரப்போ கிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் வெங்க டேஷ் கேரக்டரையும், ஜெகன், ஈடன் காதலையும் புஷ்வானமாக்குவது  ஏமாற்றம்.

ஈடன் போலவே தோழிகளாக வரும் வைஷாலி, ஶ்ரீ நிகிலா,  ஐஸ்வர் யாவும்  பார்க்க அழகுதான்.  பால சரவணன் பாத்திரமும் உழைத்திருக்கிறது

திருவருள் ஜெகன். தயாரித்தி ருக்கிறார். நரேஷ் இசையில் கூடுதல் வேகம் காட்டியிருக்கலாம்

வாசன், அன்பு டென்னிஸ் கேமிரா ஹைவேசில் சுழன்றிருக்கிறது.

சீனிவாசன் பயணக் காதலை படமாக்கியிருந்தாலும்  இது ஒருதலைக்காதலாகவே முடிகிறது.

துரிதம் – சாலைப் பயண அனுபவம்.

 

 

 

 

 

 

Related posts

PUBG PROMO to be RELEASED BY Actor Vishal Tomorrow

Jai Chandran

தயாரிப்பாளர்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

Jai Chandran

ஜெயிலர் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend