Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜெயிலர் (பட விமர்சனம்)

படம்: ஜெயிலர்

நடிப்பு: ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், விநாயகன், யோகி பாபு,  வசந்த் ரவி, ரம்யாகிருஷ்ணன், தமன்னா,  ரெடின் கிங்ஸ்லி

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்

இயக்கம்: நெல்சன் திலீப்குமார்

பி ஆர் ஒ: ரியாஸ் அஹமத்

திகார் ஜெயிலில் ஜெயிலராக இருந்து ஓய்வு பெற்ற முத்து வெல் பாண்டியன் ( ரஜினிகாந்த்) மனைவி மகன் பேரன் என சந்தோஷமாக வாழ்கிறார். இவரது மகன் போலீஸ் உதவி கமிஷனர் (வசந்த் ரவி) புராதன சிலைகளை கடத்தி விற்கும் வர்மா (விநாயகன்) பற்றி  அறிந்து அவனை மிரட்டுகி றார். திடீரென்று உதவி கமிஷனர் காணாமல் போகிறார்.அவரை கொன்றுவிட்டதாக தந்தை முத்து வேல் பாண்டியனுக்கு  தெரிய வர அதிர்ச்சி அடைகிறார்.  மகனை கொன்ற வர்மாவை பழிவாங்க    ஆவேசமாக புறப்படுகிறார். அடியால் பலம் வாய்ந்த வர்மாவை நெருங்குவதற்குள் முத்து வேல் பாண்டியனையும் அவரது குடும்பத்தையும் கொல்ல ரவுடி களை  ஏவுகிறான் வர்மா . தனியாளாக எல்லோரையும் எதிர்கொள்ள கூடுதல்.பலம் தேவைப்படுவதால் தனது நண்பர்களின் உதவியை நாடி அவர்களின் பலத்தை தமக்கு ஆயுதமாக கொள்கிறார் முத்துவேல் பாண்டியன்.  அவர்களின்  உதவியுடன் எதிர்ப்பை கடந்து வர்மாவை  நெருங்கும்போது உன் மக்ன உயிரோடு இருக்கிறான் என்று ஷாக் தருகிறான் வர்மா. மகனை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென் றால் தான் சொல்லும்.ஒரு முக்கிய கடத்தல் வேலையை செய்ய வேண்டும் என்று டீல் பேசுகிறான்.  அதை ஜெயிலர் நிறைவேற்றி மகனை மீட்கிறாரா என்பதற்கு எதிர்பாராத பதில்.அளிக்கிறது கிளைமாக்ஸ்.

அதிரடி ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனாக புது அவதாரம் எடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். உண்மையில் இதுவரை ரஜினி எடுக்காத அவதாரம்தாம் இது. வயது நரைமுடியில்தான் தெரிகிறது நடிப்பிலும், நடையிலும்,. பேச்சிலும் கம்பீரம் கொடிகட்டி பறக்கிறது

எரிக்கும் பார்வை  உயிரை முறிக்கும்  வீச்சு, ஸ்டைலை ஸ்டைலாக்கும் ஸ்டைல் என சூப்பர் ஸ்டார் ரஜினியின்  அதிரடி காட்சிகளை தெறிக்க விடுகிறது.

பேரனை கொள்ள வரும் ரவுடி களை திசை மாறி அழைத்துச் செல்லும் ரஜினி ஒரே வீச்சில் தலையை வெட்டுவது அரங்கை  அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.  பல ஹீரோக்கள் இதுபோல் காட்சி களில் நடித்தாலும் சூப்பர் ஸ்டாரின்  நடிப்பு மட்டும் தனித்து வமாக தெரிவதற்கு காரணம். அதுதான்  சூப்பர் ஸ்டார்  பவர்.

கிளைமாக்சில் சுருட்டை வாயில் லாவகமாக போட்டு பறந்து வரும் தீப்பெட்டியை பிடித்து பற்ற வைத்து மீண்டும் அதே வேகத்தில் தீப்பெட்டியை பறக்க விடும்போது “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் குறையல”  என்று படையப் பாவில் நீலாம்பரி  சொன்ன  டயலாக்தான் ஞாபகம் வருகிறது.

எக்ஸ்டிராவாக சூப்பர் ஸ்டார்  முதன்முறையாக  பிளாக் காமெடி வளையத்துக்குள் வந்து  யோகி பாபுவுடன் அடிக்கும் காமெடி லூட்டி கலகலப்பு.

படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் பாத்திரங் களை இயக்குனர் எப்படி கையாயாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது அவர்களை பக்காவாக மாஸ் குறையாமல் பயன்படுத்தி இருப்பது கெத்து.  இவர்கள் ஒவ்வொருவரையும்  ரஜினி சந்திக்கும்போது அவர்களுக்கிடையே உள்ள உண்மையான நட்பும் வெளிப்பட்டு ஆச்சர்யப்பட வைக்கிறது.

பிளாஷ்பேக் காட்சியில் திகார்  ஜெயில் கைதிகளை அடக்கி ஆளும் ரஜினியின் இளமை துடிப்பான நடிப்பும் அனல்  பறக்கிறது.

படையப்பா நீலாம்பரி தானா இந்த ரம்யாகிருஷ்ணன் என்று சந்தேகம்  எழும் அளவுக்கு அமைதி கடலாக நடித்திருக்கிறார். வீட்டுக்குள் ரவுடிகள் புகுந்து கொல்ல வருவதை சொல்லி ரம்யாவையும் மருமகளையும்  சேரில அமர வைக்கும் ரஜினி அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறார்.

பிளாஸ்ட் மோகனாக வரும் சுனில் காமெடி பாம். வீச அவருடன்  ரெடின் கிங்ஸ்லியும் சேர்ந்து வயிற்றை பதம் பார்க்கிறார்.  தமன்னாவின் நு காவாலி ரா பாடல் கவர்ச்சி மின்னலடிக்கிறது.

சன் பிக்சர்ஸ்  கலாநிதி மாறன் அதிக பொருட் செலவில் படத்தை தயாரித்திருக்கிறார்.

ரஜினியின்  ஆக்ஷன் ஸ்டைலுடன் பிளாக் காமெடியையும் சேர்த்து மேஜிக் செய்திருக்கிறார்  இயக்குனர் நெல்சன் திலீப் குமார். ஆனாலும் ரஜினியின்  பிம்பத் திற்கு இந்த ஆக்ஷன் போதாது. ஒரு சோலோ ஸ்டன்ட், 2 ஸ்டைல் சாங் இருந்திருந்தால்.படம் இன்னும்  எங்கோ எகிறியிருக்கும்.

படத்தின். பெரும் பலம்  அனிருத்தின் இடி முழக்க பின்னணி  இசையும் , உக்கும் பாடலும் என்றால் மிகையல்ல. தலைவர் மீதிருக்கும் வெறியில் அனிருத்  அடித்திருக்கும்  இசையிள் ஆவேச அன்பு வெளிப்பட்டிருக்கிறது

ஆக்ஷன் மூட் குறையாமல் கடைசி வரை அரங்கை அண்டர்கரன்ட் பயர்  எனர்ஜியுடன் வைத்திருக். கிறது  ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் கேமிரா.

ஜெயிலர்  -ஆக்ரோஷமானவன்.

 

 

Related posts

Moonu Muppathi Moonu is All set to Release on December 3rd

Jai Chandran

லக்கி பாஸ்கர் விமர்சனம்

Jai Chandran

விக்னேஷ் சிவனின் “லவ் பண்ணா உட்றனும்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend