படம்: தீதும் நன்றும்
நடிப்பு: ராசு ரஞ்சித், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல், ஈசன், இன்பா, சந்தீப்ராஜன், காலயன் சத்யா, கருணாகரன்
தயாரிப்பு: ஹரி சில்வெர் ஸ்கிரீன்ஸ் சார்லஸ் இம்மானுவேல்
இசை: சி.சத்யா,
ஒளிப்பதிவு: கெவின் ராஜ்
இயக்கம்: ராசு ரஞ்சித்
தீதும் நன்றும் பிறர் தர வராது அது நம் செயலின் வெளிப் பாடாக அமைவது என்பதை சொல்லும் கதை.
தாஸ், சிவா இருவரும் நெருங்கிய நண்பர்கள் கூட்டாளி மாறாவுடன் சேர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இரவு நேரத்தில் பெட்ரோல் பங்க், டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்து பங்கு போட்டுக்கொள்கின்றனர். இதற்கிடையில் தாஸ் தனது காதலியை அவரது வீட்டிலி ருந்து அதிரடியாக இழுத்து வந்து திருமணம் செய்கிறார். மனைவி கர்ப்பம் ஆகிறார். தாஸ் திருட்டு தொழில் செய்வதை அறிந்துக் கொள்ளும் மனைவி அவரை மறுபடியும் திருட்டு தொழி லுக்கு அனுப்ப மறுக்கிறார். அதையும் மீறி செல்லும் தாஸ் போலீசில் சிக்குகிறார். நண்பன் சிக்கியதால் சிவாவும் போலீஸிடம் சரண் அடைகி றான். குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படு கிறார்கள். மற்றொரு கூட்டாளி தப்பிக்கிறான். சிறையிலிருந்து வெளியில் வரும் இருவரும் திருந்தி வாழ எண்ணுகின்ற னர். அது நடந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல் கிறது.
சில வருடங்களுக்கு முன் சுப்ரமணியபுரம் படம் வந்து ரசிகர்களை கவர்ந்தது. அதுபோல் ஒரு கதை அம்சத் துடன் ரசனையுடன் நட்பு, காதல், துரோகம் என எல்லா வற்றையும் உள்ளாடக்கிய படமாக உருவாகி இருக்கிறது தீதும் நன்றும்.
சிவாவாக ராசு ரஞ்சித், தாஸாக ஈசன் இருவரும் தத்ரூபமாக தங்கள் பாத்திரங்களில் வாழ்ந்திருக்கின்றனர். முகமூடி அணிந்துக் கொண்டு கொள்ளையடிக்கும் முதல் காட்சியிலேயே தங்கள் கதாபாத்திரங்களுக்கு முன்னுரை எழுதுகிறார்கள்.
காதலி அபர்ணா பால முரளிக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது என்று தெரிந்ததும் நேராக அவர் வீட்டுக்கு செல்லும் ஈசன், அபர்ணாவை கையை பிடித்து அழைத்து வந்து தன் இடத்தில் வைத்து திருமணம் செய்வதும், திருட்டு தொழில் செய்வதை மனைவி அறிந்ததும் அவரை ஏமாற்றி விட்டு மீண்டும் திருட செல்வதும், போலீசிடம் சிக்கி அடிதிண்பதுமாக எதார்த்த நடிப்பில் மிளிர்கிறார் ஈசன். கிளைமாக்ஸில் இவருக்கு நேரும் முடிவு எதிர்பாராதது.
ராசு ரஞ்சித் ஹீரோவாக நடித்திருப்பதுடன் இயக்குனராகவும் பொறுப்பேற்று கனகச்சிதமாக அசத்தல் திரைக்கதையுடன் படத்தை கொண்டு சென்றிருக்கிறார்.
திருட சென்ற இடத்தில் ஈசனும், ராசுவும் சிக்கிக் கொள்ள அங்கிருந்து போலீசில் சிக்காமலிருக்க தப்பி ஓடிவதும் பரபரப்பு. இதில் ஈசனின் கால் முட்டியில் அடிப்பட்டு வலியால் துடிக்க அவரை ராசு தோளில் சுமந்துக் கொண்டு ஓடுவதும் கடைசியில் ஈசன் போலீஸில் சிக்கிக் கொள்ள அவரை விட்டு செல்ல மனமில்லாமல் ராசு ரஞ்சித் போலீஸில் சரண் அடைவதும் நட்பின் அடையாளம்.
அபர்ணா பாலமுரளியின் நடிப்பை ஏற்கனவே சூரரைப்போற்று படத்தில் பார்த்திருந்தாலும் இதிலும் கதாப்பாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார். கணவர் திருட்டு தொழில் செய் வதை கண்டிப்பதும் பிறகு சிறைக்கு சென்றுவிட்டார் என்று எண்ணி கலங்குவதுமாக மனதில் இடம் பிடிக்கிறார்.
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பெண்ணாக லிஜோ மோல் கண்களால் காதல் மொழி பேசி கவர்கிறார். ஈசன், ராசு ரஞ்சித்துடன் ஒட்டிக் கொண்டே வரும் மற்றொரு நண்பன் கதாபாத்திரம் காமெடியில் களைகட்டுகிறது. வில்லன்களுக்கும் வெறுமனே வெட்டு குத்து என்றில்லாமல் ஆங்காங்கே காட்டும் சிலுமிஷங்களில் பெயரை தட்டிச் செல்கின்றனர்.
நடிப்பு, இயக்கம் இரண்டு பொறுப்பையும் குறை வைக்காமல் செய்திருக்கிறார் ராசு ரஞ்சித். கெவின் ராஜ் ஒளிப்பதிவு காட்சிகளை மனதில் பதியம் போடுகிறது. சி.சத்யா இசையும் காட்சிகளோடு பயணித்திருக்கிறது. பாடல்களும் இனிக்கிறது.
தீதும் நன்றும்- திருந்த வைக்கும்.