Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அரசியல் பாதிப்பால் ’கோடியில் ஒருவன்’ விஜய் ஆண்டனி எடுக்கும் அதிரடி முடிவு..

செந்தூர் ஃபிலிம் இன்டர் நேஷனல் – டி.டி. ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘கோடியில் ஒருவன். இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார்.  ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். ஆத்மிகா ஹீரோயினாக நடிக்கி றார் .நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் என்.எஸ். உதயகுமார்.
கோடியில் ஒருவன் படத்தில் நடிப்பது பற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது :
கொலைகாரனுக்கு பிறகு கோடியில் ஒருவன் படம் வெளிவரவிருக்கிறது. மெட்ரோ படம் பார்த்துவிட்டு அதன் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனை பாராட்ட அவரை அழைத்தேன். அப்போது முதல் அவரை எனக்கு பழக்கம். அவர் என்னிடம் கோடியில் ஒருவன் கதை கூறினார். பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படம் நல்லா வந்திருப் பதாலும், எனக்கும் அவருக் கும் நல்ல நட்பு இருப்பதாலும் பிச்சைக்காரன் 2படத்தை இவர்தான் இயக்க உள்ளார். இதுமட்டுமில்லாமல் நிறைய படம் எதிர்காலத்தில் செய் வோம். அவர் மிஅகச் சிறந்த எடிட்டர். படமும் தயாரித் திருக்கிறார். இந்த படத்தை இன்பினிட்டி வாங்கி ரிலீஸ் இருக்கிறார்கள். என்னுடைய இன்னொரு படம் காக்கியும் வாங்கி இருக்கிறார்கள். இதில் ஆதிமிகாவுடன் நடித்திருக்கி றேன். அவர் ரொம்ப திறமை சாலி, அந்த காலத்தில் நடிகை பானுமதி ரொம்ப திறமை உள்ளவர், பல விஷயங்கள் தெரிந்தவர் என்பார்கள். அதுபோல் ஆத்மிகா திறமை படைத்தவர். இந்த படத்துக்கு நிவாஸ் பிரசன்னா இசை அமைத்திருக்கிறார். மிகவும் அருமையாக செய்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.
இவ்வாறு விஜய் ஆண்டணி கூறினார்.
இயக்குனர் ஆனந்த கிருஷ் ணன் கூறியதாவது :

கோடியில் ஒருவன் படக் கதையை விஜய் ஆண்டனியை மனதில் எண்ணித்தான் எழுதினேன்.  அவரிடம்  கதை கூறினேன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.   படம் நல்லா வந்திருக்கிறது. இது ஒரு டியூஷன் மாஸ்டரை பற்றிய கதை. சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எண்ணுபவர்.  சமூதயாத்தில் நிகழும் அரசியல் பாதிப்பால் பாதிக்கப்படுகிறர் விஜய் ஆண்டனை.  அதன் பிறகு அவருக்கு ஏற்படும் கோபத்தின் விளைவாக அவர் எடுக்கும் அதிரடிகள் படத்தை விறுவிறுப்பாக கொண்டுசெல்லும் ,முக்கியமாக கல்ல்வியை பற்றி கதை பேசுகிறது.  மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். சண்டை காட்சியில் டூப் இல்லாமல் விஜய் ஆண்டனி நடித்தார். கூவம் ஆற்றில் குத்திக்கும் காட்சியில் கூட டூப் போடாமல் குதித்து நடித்தார், அவருடைய ஈடுபாட்டால் இந்த படம் எண்ணியபடி உருவாகிறது.

இவ்வாறு இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்  கூறினார்.

நடிகை ஆத்மிகா கூறியதாவது: இதில் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். விஜய் ஆண்டனி சாருடன் நடித்தது நல்ல அனுபவம். எனக்கு நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய வேடம் கிடைத்திருக்கிறது. இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் ஷுட்டிங் கில் எப்போதும் எனர்ஜியுடன் இருப்பார். உட்காரவே மாட்டார். யாருக்கு நடிப்பு சொல்லித்தாலும் அந்த பாத்திரமாக அவரே மாறி விடுவார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது:
கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந் துள்ளது. ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குனர் .இந்த படத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. கொரோனா காலகட்டத்திலும் அனை வரின் ஒத்துழைப்போடும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது . இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொள்கிறார். முதன் முதலாக எடிட்டராக இதில் அவதாரம் எடுத்துள்ளார் படத்தின் முதல் பாதி அருமையாக வந்துள்ளது இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம். விஜய் ஆண்டனி கடுமையான உழைப்பாளி . படப்பிடிப்பு நாடக்கும்போதே ஷூட் முடித்ததும் மறுபுறம் எடிட்டிங் வேலைகளை கவனிப்பார் .
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க டாக்டர் தனஞ்செயன் , இப்படத்தை வெளியிடுகிறார். இணை தயாரிப்பு – கமல் போஹ்ரா ,லலிதா தனஞ்செயன் , பி.பிரதீப் , பன்காஜ் போஹ்ரா , விக்ரம் குமார் . ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. தெலுங்கில் விஜயராகவன் என்ற பெயரில் வெளியாக உள்ளது.
இவ்வாறு தனஞ்செயன கூறினார்.
பி ஆர். ஓ ரியாஸ் அஹமத் வரவேற்றார்.

Related posts

Varalaxmi “Sabari” Key Schedule in Kodaikanal

Jai Chandran

பகாசூரன் (பட விமர்சனம்)

Jai Chandran

Kuruthi Aattam was able to achieve a good output : Adharva

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend