Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

குடும்பத்துடன் கிராமத்தில் குடியேறிய தேவயானி

குடும்பத்துடன் கிராமத்தில் குடியேறிய தேவயானி

கொரோனா விழிப்புணர்வில் நடித்தார்..  

நடிகை தேவயானி கணவர், குழந்தைகளுடன் அந்தியூர் கிராமத்தில் குடியேறினார், அரசின் கொரோனா விழிப்பு ணர்வு விளம்பரப் படத்திலும் நடித்தார்.
இது பற்றி  நடிகை தேவயானி கூறியது:

கொரோனா போன்ற நெருக் கடியான காலத்தில்  கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம்   விழிப் புணர்வை ஏற்படுத்தும் அது மிகவேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது.
இந்த வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் தேசிய விருது பெற்ற ஆடுகளம் ஜெயபாலனுடன் இணைந்து நடித்திருக்கிறேன்.
ஒரு தந்தை மகளுக்கான பாசத்தோடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.
“பாரதி” படத்தில் நான் நடித்தபோது எனக்கு மருமகனாக நடித்துவர் இ.வி. பாபுகணேஷ். தற்போது “கட்டில்” படத்தை இயக்குகிறார். அவரஎ தற்போது நான் பங்கேற்ற “கவசம் இது முகக்கவசம்” பாடலையும் இந்த விளம்பரத் படத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார். செழியன் குமாரசாமி தலைமை ஒருங்கிணைப்பா ளராக செயல்பட்டிருக்கிறார்.

ஊரடங்கு காலகட்டத்தில் எனது குடும்பத் தோடு நான் அந்தியூர் அருகிலுள்ள எண்ணமங்கலம் கிராமத் தில் வாழ்ந்து வருகிறேன். இடைப்பட்ட நாட்களில் அரசு அனுமதியோடு சென் னைக்கு வந்து தொலைக் காட்சி தொடர்களில் நடித்து சென்றிருக்கிறேன். கிராமங் களின் வாழ்க்கையை முழுமையாக நான் இப்போது அனுபவித்து வருகிறேன். தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது. கிராமத்து சமையல் செய்வது, குழந்தைகளோடு, கணவனோடு விளையாடுவது, தினமும் இரவு நேரத்தில் என் மூத்த மகள் பகவத் கீதை வாசிக்க அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது,குழந்தைகளுக்கான கல்வி இப்படி வாழ்க்கை யின் அர்த்தங்களை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். மகாபாரதம், ராமாயணம் போன்ற தொடர்கள் தொலைக் காட்சிகளில்  மறு ஒளிபரப் பாகிறது. இதை குடும்பத் தோடு பார்த்து மகிழ்ந்து வருகிறோம்.
கொரோனா வைரஸிடமி ருந்து நாமெல்லாம் மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முழுவீச்சுடன் நான் செயல்படுவேன். நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக நான் காத்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்
இவ்வாறு தேவயானி தெரிவித்தார்.

Related posts

ஷாட் பூட் த்ரீ ( பட விமர்சனம்)

Jai Chandran

Regina Cassandra starrer “Soorpanagai” wraps up shoot..

Jai Chandran

நானி, ஸ்ரீகாந்த்தின் “தசரா” ரிலீஸ் தேதி அறிவிப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend