படம்: டாப் கன் மேவரிக்
நடிப்பு: டாம் க்ரூஸ், மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கோனெல்லி, ஜோன் ஹாம், க்லென் பாவெல், லீவிஸ் புல்மென், சார்லஸ் பார்னெல், பாஷீர் சலஹுதீன், மோனிகா பார்பரோ, ஜே எல்லீஸ், டானி ராமிரெஸ், க்ரெக் டார்சான் டேவிஸ், எட் ஹாரிஸ் மற்றும் வால் கில்மர்
தயாரிப்பு: பாராமவுண்ட் பிக்சர்ஸ்
இசை: லேடி காகா,ஹர்வொட் பல்டர்மெயர், ஹான்ஸ் ஜிம்மர், லோர்னெ பல்ஃபே
ஒளிப்பதிவு: கிளவ்டியோ மிராண்டா
இயக்கம்
ஜோசப் கோசின்ஸ்கி
பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா தமிழ்)
கடற்படையின் சிறந்த விமானி களில் ஒருவராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்த பிறகு, பீட் “மேவரிக்” மிட்செல் (டாம் குரூஸ்), ஒரு தைரியமான சோதனை பைலட் பணியை மேற்கொள்கிறார் மற்றும் அவரை தொடரும் சிக்கல்களை துணிந்து எதிர்கொள்கிறார். அவர் டாப்கன் பட்டதாரிகளின் ஒரு பிரிவினருக்குப் பயிற்சி அளிக்கும் போது அவருடைய இறந்துபோன நண்பனின் மகன் ரூஸ்டரை சந்திக்கிறார். டாம் க்ரூஸை கண்டாலே ரூஸ்டர் கடுப்பாகிறான். இந்நிலையில் எதிரி நாடு ஒன்று ரகசியமாக அணு உற்பத்தி ஆலை அமைப்பதை அழிக்கும் பொறுப்பு டாப்கான் மாணவர்களுக்கு ஒப்படைக் கப்படுகிறது. அவர்களுக்கு டாம் க்ரூஸ் பயிற்சியாளராக இருக்கிறார். இந்தகுழுவினர் அந்த அணு ஆலையை எப்படி அழிக்கின்றனர் என்பதை மூச்சு திணறவைக்கும் சாகசத்துடன் கிளைமாக்ஸ் சொல்கிறது.
ஆயிரம் ஆக்ஷன் படங்கள் இதுவரை பார்த்திருந்தாலும் டாப் கன் மேவரிக் படம் அளிக்கும் அனுபவம் இதுவரை காணாதது. படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே க்ரூஸின் அதிரடி தொடங்கி விடுகிறது.
டெஸ்ட் ரைடு செல்ல போதிய தகுதி இல்லை என்று டாம் க்ரூஸ் டீமை உயர் அதிகாரி தடுக்க அவருக்கு தனது திறமையை நிரூபிக்க ஜெட் விமானத்தை எடுத்துக் கொண்டு புழுதி பறக்க சரேலென க்ரூஸ் பறக்கும் அந்த முதல்காட்சியே மிரள வைக்கிறது.
ரகசிய அணு ஆலையை அழிக்க க்ரூஸ் சக பயிற்சி மாணவர்களை ஜெட்டில் பின் தொடரச் சொல்லி மலைப் பள்ளத்தாக்கில் விமானத்தை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்று இலக்கை அழிப்பது த்ரில்.
பல இளம் நடிகர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். இதில் சிலர் வருங்கால ஹ்ஹலிவுட் ஹீரோக்களாக வலம் வருவார்கள்.
ஜோசப் கோசின்ஸ் இயக்கம் அமெரிக்க கடற்படையை கண்முன் நிறுத்துகிறது.
அதேபோல் கிளவ்டியோ மிராண்டாவின ஒளிப்பதிவு ஜெட் வேகத்துக்கு ஈடுகொடுத் திருக்கிறது.
டாப் கன் மேவரிக் – டாம் க்ரூஸின் விமான சாகசங்கள்.