Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தண்டட்டி (பட விமர்சனம்)

படம்: தண்டட்டி

நடிப்பு: பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா, முகேஷ், தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம்

தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார்

இசை: கே.எஸ்.சுந்தர மூர்த்தி

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி

இயக்கம்: ராம் சங்கையா

பி ஆர் ஒ: ஏ.ஜான்

கிடாரிபட்டி கிராமத்தில்  பிரச்சனையென்றால்  அங்கு போலீஸ்கூட  செல்ல தயங்குகிறது. போலீஸ் வந்தால் அந்த ஊர் மக்கள் அடித்து விரட்டுகிறார்கள். தன்னுடைய அப்பாத்தா தங்க பொண்ணுவை ( ரோகிணி) காணவில்லை என்று சிறுவன் ஒருவனும் இன்னும் சிலரும்  போலீசில் புகார் தருகி றார்கள்.அதற்கு போலீசார் யாரும்  செவி சாய்க்காமல் மவுனம் சாதிக்கிறார்கள். அப்போது கான்ஸ்டபிள் சுப்ரமணி ( பசுபதி) மட்டும்  விசாரிப்பதற்காக சிறுவனுடன் கிடாரிப்பட்டி வருகிறார். ஊரெங்கும் தேடி ஒருவழியாக தங்க பொண்ணுவை சுப்ரமணி கண்டுபிடிக்கிறார். சிறிது நேரத்தில் தங்கபொண்ணு இறந்து விடுகிறார். அவரது உடலை கிடாரி பட்டிக்கு கொண்டு வருகி றார்கள் ஊரே திரண்டு ஒப்பாரி வைக்கிறது. ஒப்பாரி வைக்கும் சாக்கில் தங்க பொண் ணுவின் மகள்கள் அவர் காதில் அணிந்திருக்கும் லட்சக்கணக்கில் மதிப்பு கொண்ட தங்க  தண்டட்டி யை பங்கு பிரிப்பதில் ஆர்வமாக உள்ளனர். திடீரென்று தண்டட்டி காணாமல்  போகிறது. அதை திருடியது யார் என்று ஊர் மக்களை கான்ஸ்டபிள் விசாரிக் கிறார் அவரால் திருடிய வனை கண்டு பிடிக்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

இந்த கால தலைமுறை கேள்விப்படாத பெயர் தண்டட்டி. அதை பட தலைப்பாக வைத்த இயக்குனர், அனுமதித்த தயாரிப்பாளர் இருவ ருக்கும்  முதலில்  ஒரு கைதட்டல் தரலாம். அந்த காலத்தில் பாட்டிகள் காதில் அணியும் அணிகலன் தான் தண்டட்டி.

பெயரை கேட்டவுடன் படம் பார்க்க ஆவலை தூண்டு கிறது. எதிர்பார்ப்புடன் திரையில் பார்க்க அமரும் போது ஏமாற்றம் தராத ஒரு கதையை, நகைச் சுவை கலந்த திரைக்கதை அமைத்து தந்திருக்கி றார்கள்.

தங்க பொண்ணாக நடித்திருக்கும் ரோகிணி தனது பண்பட்ட நடிப்பால் வேடத்துக்கு மெருகூட்டி யிருக்கிறார்.  தன்மகள்கள் தன்னிடம் உள்ள ஒவ்வொரு சொத் தையும் பாசம் காட்டுவது போல் நடித்து ஆட்டய போடும் போதும் மறுப்பு சொல்லாமல் விட்டுத் தருவதும்,  எல்லோருமே தன்னை பணத்துக்காக மட்டுமே  வலம்  வருவதை கண்டு திடீரென்று  காணாமல் போவதில் நியாயம் இருக்கிறது.

ரோகிணி 7 பிள்ளைகள் பெற்றவர் என்று கூறப் பட்டாலும், பெரிய காதில் தண்டட்டி அணிந்தி ருந்தாலும் அவரது மேக்கப்பில் முதிர்ச்சி தெரியவில்லை. தீபா வெங்கட்டைவிட ஸ்லிமாகவே இருக்கிறார். இந்த விஷயத்தில் இயக்குனர் கோட்டை விட்டது எப்படி?  மேக்கப் காட்டிக்கொடுத்தாலும் அதை தனது நிதானமான நடிப்பால் சமன் செய்கி றார் ரோகிணி.

கான்ஸ்டபில் சுப்ரமணி யாக கிடாரிபட்டிக்கு வரும் பசுபதி அங்கு நடக்கும் அமர்க்களத்தை பார்த்தும் பயப்படாமல் கடைசிவரை பொறுத்துக்கொண்டு பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது அவரது கதாபாத்திரத்தின் பொறுமை  புரியவில்லை. கிளைமாக்சில் அவர்  யார் என்பதை வெளிப்படுத்தும் போதுதான் அவர் காட்டிய பொறுமைக்கும், பொறுப்பான நடத் தைக்கும் அர்த்தம் புரிகி றது.   இறுதிகட்ட  காட்சியில் தண்டாட்டி சிதையில் எரியும்போது  ஒரு உண்மை காதல் மெய்ப்படுகிறது.

குடிகாரனாக அரிவாளும், கையுமாக பசுபதியை மிரட்டும் விவேக் பிரசன்னா காமெடியன் இல்லாத குறையை போக்கியிருக்கிறார்.

தண்டட்டி அணிந்த பாட்டிகள் ஒப்பாரி வைக்கும் சாக்கில் பசுபதியை கலாய்ப்பது கலகல. அதே சமயம்  தெரிந்த முகங்கள் இன்னும் நிறைய இருந்தி ருந்தால் காட்சிகளுக்கு வலு சேர்ந்திருக்கும். காமெடியையும் இன்னும் சேர்த்திருக்கலாம்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன் குமார் தயாரித்திருக்கிறார். கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை ஓகே. இன்னமும் நிறைய கிராமத்து இசையை பயன்படுத் தாமல் விட்டது ஏனோ?

மகேஷ் முத்துசாமி  ஒளிப் பதிவு ரசிகர்களை ஒரு கிராமத்துக்குள் அழைத்துச் சென்றிருக் கிறது

இயக்குனர் ராம் சங்கை யாவின் முதல் முயற்சி வெற்றி தந்திருக்கிறது.

தண்டட்டி – அழியும் நிலை கிராமத்து வரலாறுக்கு உயிர்.

 

 

 

 

 

 

Related posts

Trisha Joins The Shoot Of Chiranjeevi’s Vishwambhara

Jai Chandran

பிரபாஸ் பிறந்தநாள் : ரசிகர்களுக்கு  அட்வான்ஸ் விருந்து..

Jai Chandran

Tamil Short Film “SARAS” Won 70 Awards

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend