Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு (பட விமர்சனம்)

படம்: பாயும் ஒளி நீ எனக்கு

நடிப்பு: விக்ரம் பிரபு, வாணி போஜன், டாலி தனஞ்ஜெயா, ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி

தயாரிப்பு: கார்த்திக்

இசை: சாகர்

ஒளிப்பதிவு: ஶ்ரீதர்

இயக்கம்: கார்த்திக் அத்வித்

பி ஆர் ஒ: டைமண்ட் பாபு, சதீஷ், சதீஷ்குமார், சிவா

சிறுவயதில் பெற்றோ ருடன் காரில் செல்லும் போது நடக்கும் விபத்தில் பெற்றோரை இழப்பதுடன் பார்வை குறைபாடு பாதிப்பில் சிக்குகிறார் விக்ரம் பிரபு. அவரை சித்தப்பா ஆனந்த் எடுத்து தைரியம் சொல்லி  வளர்க் கிறார். குறைவான வெளிச்சத்தில் பார்க்கும் திறன் குறைந்திருந் தாலும் அதை குறையாக எண்ணாமல் வாழ்கிறார் விக்ரம்பிரபு. இந்நிலை யில் ஆனந்த் கொல்லப் படுகிறார். தனது சித்தப்பா கொல்லப் பட்டதற்கு காரணம் தேடி துப்பறியும் வேலையில் ஈடுபடுகிறார். இதனால் அவரையும் கொல்ல ரவுடிகள் முயல்கின்றனர். அவர்கள் யார்? எதற்காக கொலை செய்ய முயல்கி றார்கள் என்பதற்கு விறுவிறுப்பாக பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

விக்ரம்.பிரபுக்கு ஆக்ஷன் அதிரடி காட்டும் வாய்ப் பாக அமைந்திருக்கிறது இப்படம். சுமார் 40 நாட்கள் இப்படத்திற்கு சண்டை காட்சிகள் மட்டுமே படமாக் கப்பட்டிருக்கிறது. பார்வை குறைபாடுடன் மோதுவது போல் ரவுடிகளிடம் விக்ரம் பிரபு நடிக்க வேண்டியி ருப்பதால் அதற்கேற்ப அருகில் வரும் சத்தத்தை காதில் கேட்டு  ரவுடிகளை அடித்து சாய்க்கும்போது வெறுமனே ஆக்ஷன் மட்டுமல்லாமல் மைண்டுக்கும்  வேலை கொடுத்திருக்கிறார் விக்ரம்.பிரபு.

ரவுடியை துரத்திக் கொண்டு மாடிகளில் ஏறி குதித்து ஓடும் காட்சியில் வேகம் காட்டும் விக்ரம் பிரபு கிளைமாக்ஸ் கண்ணாடி சண்டை காட்சி யிலும் அசத்துகிறார்.  இந்த காட்சியில் கூடுத லாக கண்ணாடிகளை பயன்படுத்தியிருந்தால் வித்தியாசமான சண்டை காட்சியாக இருந்தி ருக்கும்.

வானிபோஜன் பேருக்கு வந்து நிற்கிறார். பல் காட்சிகளில் விக்ரம் பிரபுவுடன் வெறுமனே நிற்கிறார்.

படத்தில் வில்லன் என்று பார்த்தால் டாலி தனஞ் ஜெயாவைத்தான் சொல்ல வேண்டும்.   கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் விக்ரம் பிரபுவும், தனஞ்ஜெயாவும் மோதுவது விறுவிறு.

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலியின் உதவி இயக்குனராக பணியாற் றிய கார்த்திக் அதிவித் முழுக்க ஆக்ஷன் படத்தை கையாண்டிருக்கிறார். ஆக்ஷன் கையாண்டவிதம் ஒ கே ஆனால் சென்டி மென்ட் காமெடிக்கு போது மான ஸ்பேஸ் இல்லாதது மைனஸ்.

ஶ்ரீதர் ஒளிப்பதிவு காட்சிக்கு உயிரூட்டு கிறது. சாகர் இசை  விறுவிறுப்பை கூடுகிறது.

பாயும் ஒளி நீ எனக்கு – சண்டை பிரியர்களுக்கு.

.

 

 

Related posts

அயோத்தியில் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட டீசர் வெளியீடு

Jai Chandran

கொலைச் சேவல் (பட விமர்சனம் )

Jai Chandran

Kallan teaser will revealed by Aishuwariya Tomorrow 6pm

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend