Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டாணாக்காரன் (பட விமர்சனம்)

படம்: டாணாக்காரன்

நடிப்பு: விக்ரம்பிரபு, லால், மதுசூதனன், போஸ் வெங்கட், லிவிங்ஸ்டன், பாவல், அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர்

தயாரிப்பு: பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி சார்பில் எஸ்.ஆர்.பிரபு

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: மாதேஷ்
மாணிக்கம்

இயக்கம்: தமிழ்

ரிலீஸ்: டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ் ( ஒடிடி)

பி.ஆர்.ஒ: ஜான்சன்

எம். ஏ. கிரிமினாலஜி படித்திருக்கும் விக்ரம் பிரபு போலீஸ் பயிற்சியில் சேர்கிறார். அவருடன் இன்னும் பலர் பயிற்சியில் சேர்கின்ற னர். இதற்கிடையில் பயிற்சிக்கு தேர்வாகியும் அழைக்கப்படாமல் இருந்த பலர் கோர்ட் உத்தரவுப்படி பயிற்சியில் இணைகின் றனர். ஆனால் அவர்கள் 40 வயது கடந்து இளமை துடிப்பை இழந்தவர்களாகி யிருக்கின்றனர். இவர்களுக்கு லால், எம்.எஸ். பாஸ்கர் பயிற்சியாளாராகின் றனர். இவர்கள் இருவருக்கும் உயர் அதிகாரிகள் மதுசூதன்ராவ், போஸ் வெங்கட். இந்த களத்தில் லால், மதுசூதனராவ் எடுக்கும் முடிவுக்கு பயிற்சியிலிருப்பவர்கள் கட்டுப்பட வேண்டும் மீறினால் கடுமையான பனிஷ்மென்ட் அனுபவிக்க வேண்டும். இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் விக்ரம்பிரபு. என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் அதையெல்லாம் தாண்டி வந்து லால்,மதுசூதனனுக்கு ஷாக் தருகிறார். இந்நிலையில் பயிற்சி மையத்தில் நடக்கும் போட்டிக்கு எதிரணியுடன் மோத வயது முதிர்ந்த பயிற்சியாளர்களுடன் களம் இறங்குகிறார் விக்ரம்பிரபு. இவர்களை வீழ்த்த வேண்டும் என்று மதுசூதனன் கடும் முயற்சிகளை கையாள்கிறார். அடுத்து நடப்பது என்ன என்பதை த்ரில்லுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது

போலீஸ் கதை என்றாலே ஹீரோயிசம் தான் அதிகமிருக்கும் ஆனால் இப்படம் முழுக்க போலீஸ் பயிற்சி களத்தில் நடக்கும் போராட்டம், அத்துமீறல், பழிவாங்குதல், உயர் அதிகாரியின் கடுமையான போக்கு என திரைப்படத் தையே புதிய கோணத்தில் இயக்கியிருக் கிறார் தமிழ்.

ஜெய்பீம் படத்தில் கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்தவர்தான் இப்பட இயக்குனர் தமிழ். தன் அனுபவத்தையும் கற்பனையையும் கலந்து டாணாக்காரன் படத்தை தந்திருக்கிறார்.

அறிவு என்ற கதாபாத்திரத்தில் முற்றிலு மாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார் விக்ரம் பிரபு. கடுமையான வெயிலில் பெரும்பாலும் படப்பிடிப்பு நடந்திருந் தாலும் வெயிலின் தாக்கத்தை தாங்கிக்கொண்டு நடித்திருக்கும் உழைப்பு அவர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது.

அரை கால் சட்டை அணிந்து பரேட் செய்யும்போது விக்ரம்பிரபு நிஜபயிற்சியாளாராக மாறியிருக்கிறார்.

கிரிமினாலஜி படித்திருந்தாலும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற போலீஸில் சேரும் விக்ரம் பிரபு அங்கு நடக்கும் அத்துமீறல்களை கண்டு கோபத்தில் பொங்குவதும் அதற்காக தரப்படும் பனிஷ்மென்ட்களை அனுபவித்து மீண்டெழுந்து வெற்றியை தொட்டு சாதிப்பதுமென படம் முழுவதும் கடின உழைப்புகாட்டி அப்ளாஸ் அள்ளு கிறார்.

மதுசூதனன், லால் இருவரும் கடுமையை கொட்டும் உயரதிகாரிகள் முத்துப்பண்டி ஈஸ்வரமூர்த்தியாக நடித்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக் கின்ற்னர்.

எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் , பாவேல், பிரகதீஸ்வரன், அஞ்சலி நாயர், லிவிங்ஸ்டன் என யாரும் சோடை போகவில்லை. இவர்களுடன் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களும் சளைக்கமல் உழைத்திருக்கின்றனர்.

பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக் கிறார்.

மாதேஷ் மாணிக்கம் கேமிராவை சுமந்துக்கொண்டு விரிந்த கிரவுண்டில் வெயில் சூடு தாங்கிக்கொண்டு எப்படி ஓடி ஓடி காட்சிகளை படமாக்கி இருப்பார் என்பதை எண்ணும் போதே உடல் சிலிர்க்கிறது.

ஜிப்ரான் இசை  காட்சிகளை உயிருள்ள பிம்பங்களாக மாற்றியிருக்கிறது.

இவர்கள் எல்லோருடைய உழைப்புக்கும் பின்னால் இயக்குனர் தமிழ் முன்னா லிருந்திருக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நினைக்காமலிருக்க முடியவில்லை.

டாணாக்காரன் – உழைப்பாளன்

Related posts

லெஜண்ட் சரவணன் நடிக்கும் தி லெஜண்ட்’ ஜூலை 28 ரிலீஸ்

Jai Chandran

TheNight Xclusive Photoshoot Stills Vidhu, Sakshiagarwal

Jai Chandran

ஆரி அர்ஜுனா நடிக்கும்்படத்துக்கு பாடல் காட்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend