வி.இசட் துரை இயக்கும் படம் நாற்கலி. எம்ஜிஆர் புகழை பேசும் இப்படத்திற்கு நெஞ்சமுண்டு என்ற பா.விஜய் பாடலை எழுதினார். இப்பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட் டார். இப்பாடல் காட்சியில் அமீர் நடித்தார். எம் ஜி ஆர் புகழ் பாடும் அப்பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அது வருமாறு:
பல்லவி:
நெஞ்சமுண்டு நேர்மையுண்டூ சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர் வாத்தியாரு.!
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர் வாத்தியாரு.!
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு.!!
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆரு.!
நெஞ்சமுண்டு நேர்மையுண்டூ சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர் வாத்தியாரு!
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு.!!
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆரு.!
அவர் அண்ணனின் தம்பியே
ஈழத் தம்பியின் தோழனே
அவர் மக்களின் தலைவனே
அவர் வழியில் நான் ரசிகனே
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர் வாத்தியாரு.!
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு.!
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆரு.!
தன்னந் தனியாய் தமிழ்நாட்டில் – ஒரு
ஏழைத்தாயவள் சிறுகூட்டில்
வாழ்வைத் துவக்கிய திரைக்கலைஞன்
தென்னாட்டின் பெருந்தலைவன்
தோட்டா அவரை ஜெயித்ததில்லை – அவர்
தோட்டத்தில் பாசம் குறைந்ததில்லை
மக்கள் திலகத்தின் மணிமகுடம்
இதுநாள் வரை இறங்கவில்லை
இதயக்கனியாய் ஒரே மனம்
இமயமலையாய் எழும் குணம்
எதையும் ஜெயிக்கும் ஒரே பலம்
என்றும் நிலைக்கும் ஒரே புகழ்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர் வாத்தியாரு!
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு!
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆரு.!
சரணம் 2:
புரட்சித் தலைவன் என்றழைத்தோம் – அந்த
பொன்மனச் செம்மலை தினம் ரசித்தோம்
தன்னை நாட்டுக்கே தந்ததினால்
தமிழ்நாட்டை நாம் கொடுத்தோம்
வலது கையிலே கடிகாரம் – ஊர்
வறுமை தீர்த்தது அவர் அதிகாரம்
வாழும் போதிலே வரலாறு – அவர்
போல் இங்கு வேறாரு.?
கொடுத்துச் சிவந்த வள்ளல் கரம்
கொஞ்சிச் சிரிக்கும் பிள்ளை மனம்
தோல்வி அறியா ஒரே முகம்
நாளை நமதே என்னும் திடம்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு.?
அந்த வள்ளலுக்கு வைச்ச பெயர் வாத்தியாரு.!
மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு.!
அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆரு.!
அவர் அண்ணனின் தம்பியே
ஈழத் தம்பியின் தோழனே
அவர் மக்களின் தலைவனே
அவர் வழியில் நான் ரசிகனே
இவ்வாறு அந்த பாடல் இடம்பெறுகிறது.