Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்: மாரடைப்பில் உயிர் பிரிந்தது

பிரபல நடிகரும், எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரன் வேடத்தில் நடித்தும் வந்தவர் மாரிமுத்து. இவர் இன்று காலை  திடீர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் டிவி நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித் துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

மருது, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மாரிமுத்து. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத் திரத்தில் நடித்து வந்தார். இது அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியல் குழுவினர் அனைவரும் படப் பிடிப்புக்கு தயாராகி கொண்டிருக்கும் போது, மாரிமுத்துவிடம் இருந்து  இயக்குனர் திருச்செல்வத் திற்கு ஒரு போன்  வந்துள்ளது. அதில் பேசிய அவர்… நீங்க படப்பிடிப்பை நடத்தி கொண்டே இருங்கள். நான், ஒரு படத்தின் டப்பிங் இருக்கிறது அதை முடித்துக் கொண்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன் என கூறியுள்ளார். இயக்குனர் திருச்செல்வம் ஒ கே சொன்னார்.

ஆனால் சிறிது நேரத்தில் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தகவல் வந்தது. இந்த தகவல் அவைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது

மாரிமுத்து ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்து ராஜ்கிரண் மணிரத்தினம், சீமான், எஸ் ஜே சூர்யா, வசந்த் போன்றவர்களிடம் துணை இயக்குனராக பணியாற் றினார். பின்னர் ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ போன்ற படங்கள் இயக்கினார்.   மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

Related posts

FIR – Reservations OPEN

Jai Chandran

“காக்கும் வடிவேல்” இசை உலகில் புதிய மைல்கல்..

Jai Chandran

ராய் லட்சுமிி , ‘நீதானே அழகு வதனா’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend