‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘முத்தின கத்திரிக்கா’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய 5 வெற்றிப் படங்களை தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் 6வது படம் “புரொடக்ஷன் எண்.6” -ன் படப் பிடிப்பு இன்று ஆரம்பமாகியது. படத் திற்கு இன்னும் பெயர் சூட்டப்பட வில்லை. சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்.
மத்திய அரசு பண மதிப்பீட்டை குறைத்த போது பலரின் வாழ்க்கையில் மிகப் பெரிய விளைவுகள் ஏற்பட்டது. அப்படி பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கை வாழ்க்கை யில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவை யாக கூறுவதே இப்படத்தின் மையக்கரு.
இதில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பத்ரி இந்த படத்தை வசனம் எழுதி இயக்குகிறார். சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கி றார். கலை இயக்குநராக பிரேமும் மற்றும் நடன இயக்குநராக தினேஷும் பணியாற் றுகிறார்கள்.தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி
இப்படத்தின் ஷூட்டிங்கை கொரோனா மாஸ்க் அணிந்தபடி சுந்தர் சி தொடங்கி வைத்த வீடியோ வெளியாகி உள்ளது. போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ஹீரோ பிரசன்னாவுக்கு இயக்குனர் காட்சியை விளக்கும் சீன்கள் இடம்பெற்றுள்ளது.
previous post