Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஹாலிவுட் இசை ஆல்பத்தில் ஜிவி பிரகாஷ் சாதனை..

 

ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள இந்த ஹாலிவுட் ஆல்பத் தின் பெயர் ‘கோல்ட் நைட்ஸ்’. இந்த ஆல்பத்திலிருந்து ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியானது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இருவரும் வெளியிட்ட பாடல் ஹாலிவுட்டில் ஹிட்டாகி இருக்கிறது.
துள்ளலான இசை, I Need to Know என்று ஈர்க்கும் வரிகள் என சமூக வலைதளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. யூடியூப் ட்ரெண்ட்டிங்கிலும் உடனடியாக இடம் பிடித்தது. இதனால் உற்சாகத்தில் இருக்கி றார் ஜி.வி.பிரகாஷ். அசுரன், சூரரைப் போற்று என இசையுலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜி.விக்கு இந்த ஹாலிவுட் ஆல்பம் என்பது அவருக்கு ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.
ஏ.ஆர்.ரஹ்மான், அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர் தாணு, சூர்யா, தனுஷ், ராதிகா சரத்குமார், இயக்குநர் கார்த்திக் நரேன், ரைசா வில்சன், அலிசா அப்துல்லா உள்ளிட்ட பலரும் இந்தப் பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து ஜி.வி.யின் திரையுலக நண்பர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என வாட்ஸ்-அப் வாழ்த்தால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும், சக இசையமைப்பாளராக யுவன் மற்றும் இமான் ஆகியோரும் வாழ்த்தி யிருப்பது கூடுதல் சிறப்பு.
‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சி யில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத் திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார்.
ஹாலிவுட்டில் எடுத்து வைத்துள்ள முதல் அடியே ஜி.வி.பிரகாஷுக்கு வெற்றி அடைந்துள்ளது. அடுத்து எடுத்து வைக்க வுள்ள அனைத்து அடிகளுமே வெற்றிய டைய வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறார். விரைவில் அடுத்த ஹாலிவுட் பாடல் குறித்த அறிவிப்பு வரும். அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தன் மகள் அன்வியுடன் இணைந்து கண் சிமிட்டி சிரிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

Related posts

”ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்” டிக்கெட்டுக்கு நெட்டில் மோதல்

Jai Chandran

இந்திய திரைப்பட விழாவில் அசுரன் திரையிட தேர்வு

Jai Chandran

என் படம் ஓடுமா என்றவர்களுக்கு மகாராஜா பதிலடி: விஜய்சேதுபதி ஆவேசம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend