Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம் ஜி ஆர் நடிக்க வராமலிருந்திருந்தால்.. கபில் ரிட்டன்ஸ் பட விழாவில் சுப வீ கேள்வி

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தர ராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்தி வீரன்’சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான்,
பேபி ஷர்ஷா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடை பெற்றது.

இவ்விழாவில் பேராசிரியர் சுப வீரபாண்டியன், இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், பட அதிபர் என்.விஜயமுரளி நடிகர் வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

பேராசிரியர் சுப வீரபாண்டியன் பேசியது:

நான் இந்த விழாவில் கலந்து கொள்வதை பற்றி சமூக வலைதளத்தில் அழைப்பை பதிவிட்டிருந்தேன். இதில் கேள்விகள் எழுப்பப்பட்டது. திரைப் பட விழாவில் நீங்கள் எப்படி ?அதுவும் ஆத்திகரான இயக்குனர் பேரரசும் நீங்களும் ஒரே மேடையில் எப்படி? என பல்வேறு விதமாக கேள்விகள் எழுப்பப் பட்டது.

வெவ்வேறு கட்சிகள் என்பது சினிமா மேடைக்கு அல்ல. எஜமான், சின்ன கவுண்டர் படத்தை நான் எங்கோ  உட்கார்ந்து பார்த்தவன். அந்த படத்தை இயக்கிய ஆர்.வி. உத்யகுமார் உடன் அமரும்  வாய்ப்பு இந்த மேடையில் எனக்கு கிடைத் துள்ளது.

திரைப்படம் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? அதில் வெற்றி தான் பெற்றிருக்க முடியுமா? நாம் கலையை நேசிப்ப தை விட கலைஞர்களின் நிலையை சிறப்பாக நேசிக்க கற்றுக் கொண்டிருக்கின்றோம். அதனால் ஆயிரம் மேடைகளில் பேசுவதை படத்தில் அரை மணி நேரத்தில் கூறிவிடுகிறார்கள். படத்தை ஒரு முறை பார்த்தால் போதும் அது மனதில் நிற்கும்.

திரைப்படம் எடுப்பது நல்ல தொழில்தான். நல்ல படைப்பு களை கொண்டு சேர்த்தால் மக்களுக்கு போய் சேரும். இதை கருத்தில் கொண்டுதான நல்ல கதையை எடுத்திருக்கிறார் ஸ்ரீனி சௌந்தரராஜன்.அதுவே மிகச் சிறந்த தொண்டாக நான் பார்க்கி றேன். படத்தின் பாடல்களை ஒரு முறை கேட்டேன், நான்கு ஐந்து முறை கேட்கத் தோன்றியது இதுவே இந்த படத்திற்கு வெற்றி என்று சுப. வீரபாண்டியன் பேசினார் .

இயக்குனர் பேரரசு பேசியது:
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் ஐயா சுப.வீ தான்.அவருடைய வாழ்த்து படத்திற்கு முக்கிய மானது. நான் கடவுள் ஏற்பாளர் அவர் கடவுள் மறுப்பாளர்.
சுப.வீ ஐயா நல்லதையே நினைப்பவர்.அவரின் மனசு தான் கடவுள். எனவே கடவுளையும் வணங்குகிறேன்.
அவரையும் வணங்குகிறேன்.

படத்தை எடுத்துக் கொண்டால் மாணவர்களுக்கும் பெற்றோர் களுக்கும் ஏற்றாற்போல் படம் எடுத்திருக்கிறார் இயக்குனர் பேராசிரியர் ஸ்ரீனி.சௌந்த ரராஜன். நான் படம் பார்க்க சென்றால என் மகளோடு தான் செல்வேன். ஆகவே பெண் குழந்தைகளும் பார்க்கும் படமாக இப்படம் உள்ளது. இது இளைஞர் களும் பெற்றோர்களும் குடும்பத் துடன் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான படம். மனதார வாழ்த்துவதில் நான் பெருமை அடைகிறேன் என்றார் இயக்குனர் பேரரசு.

கவிஞர் சினேகன் பேசியது:
எல்லா கனவுகளும் நிறைவேற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஆனால் இவர் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு தன்னை உருவாக்கி இருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீனி சௌந்தர ராஜன்.

படத்தின் இயக்குனர் பேராசிரியர் ஸ்ரீனி செளந்தரராஜன் பேசியது:

மூச்சிருக்கும் வரை முயற்சி செய்யுங்கள் உங்கள் கனவை நிறைவேற. ஆறிலிருந்து அறுபது வயதுவரை இந்த கதை பொருந்தும் என்பார்கள். ஆனால் ஆறிலிருந்து மூச்சு இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த கதை பொருந்தும்.நமது கனவு நிறைவேற மூச்சிருக்கும் வரை முயற்சி செய்யுங்கள் என்றார்.

-கிரிக்கெட் பவுலரை மையப் படுத்தி உருவாகியுள்ள கதை கபில் ரிட்டன்ஸ் . இப்படத்தை. கதை திரைக்கதை வசனம் எழுதி பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தர ராஜன்  இயக்கி உள்ளார்.

ஒளிப்பதிவு:ஷியாம் ராஜ்

பாடல்கள் : கவிஞர் சினேகன்,
கவிஞர் பா.விஜய், கவிஞர் அருண்பாரதி

இசை  ஆர்.எஸ்.பிரதாப் ராஜ்.

மக்கள் தொடர்பு :வெங்கட்
நிர்வாகத் தயாரிப்பு:
ஏ.ஆர்.சூரியன்

Related posts

8 நாளில் சிம்புவின் ’ஈஸ்வரன்’ தாண்டவம் ஆரம்பம்

Jai Chandran

எழில் இயக்கிய “யுத்த சத்தம்” எப்படி? நடிகர்கள் வியப்பு

Jai Chandran

தமிழகம்: மே 3க்கு பிறகு ஊரடங்கு தொடரும்?

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend