தொலைக் காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சித்ரா, இவர் பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல்வேறு டிவி சீரியல்களில் நடித்துள்ளார். சமீபத்தில்தான் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் சித்ரா தங்கி இருந்துள்ளார். அங்குதான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக சித்ரா தநனது வருங்கால கணவருடன் போனில் பேசி இருக்கிறார். குளித்துவிட்டு வந்து பேசுகிறேன் என்று சொன்னவர் மீண்டும் இணைப்பில் வரவில்லை பல முறை போன் செய்தும் அவர் இணைப்பில் வராததால் சந்தேகம் அடைந்தவர்கள் அறை கதை தட்டிப்பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் சித்ரா துக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விரைல் திருமணம் நடவிருந்த நிலையில் சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிவி நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களிடையே சித்ரா தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.