சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இலங்கை பல கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் பொருளாதா நெருக்கடி முற்றியது. விலைவாசிகள் விஷம்போல் உயர்ந்தது. இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய வலியுறுத்தி மக்கள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்தது. ஆனாலும் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய மறுத்துவந்தார்.

கடந்த சில நாட்களுக்குமுன் போராட்டம் தீவிரம் அடைந்தன இதையடுத்து பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆனாலும் அவரது ஆதரவாளர்கள் போரட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். போலீஸாரும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி போராட்டக் காரர்களை கலைத்தனர்.
இதையடுத்து போராட்டம் தீவிரமடைந்தது. ராஜபக்சே ஆதரவாளர் களை போரட்டக்கரர்கள் தேடித் தேடி தாக்கினர். இதற்கிடையில் மகிந்த் ராஜ பக்சே வீட்டை போடட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.இதில் வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது.
இதற்கிடையே கலவரத்தில் ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரலா போரட்டக்கரர்களை துப்பாக்கியால் சுட்டார். இதில் சிலர் பலத்த காயமடைந் தனர். மருத்துவனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் பலியானார். இதில் கோபமமடைந்த போராட்டக்கரர்கள் துப்பாக் யால் சுட்ட அமரகீர்த்தியை அடித்தே கொன்றனர அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.
தற்போது இலங்கை முழுவதும ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
