*சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடும் ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் ( பட விமர்சனம்)
ஸ்பைடர் மேன் வெர்ஸ் என்பது மாற்று பிரபஞ்சங்களில் உள்ள ஸ்பைடர்-மேன்களால் பகிரப்படும் பல அண்டங்களாகும். இதுவே, கதை நிகழும் களமாகும்.
2018ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்பைடேர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ எனும் படத்தின் தொடர்ச்சியாகும். இப்படம்.
மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர்-மேனைக் கம்ப்யூட்டர் அனிமேஷனில் உருவாக்கியுள்ளனர். கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்ட பிம்பங்களை (CGI) ஸ்டாப்-மோஷன் அனிமேஷனாக எடுக்கப்பட்ட முதல் ஸ்பைடர்-மேன் தொடர் இதுவே!
மூன்று பாகங்கள் கொண்ட தொடரின் 2 ஆவது பாகமாக இப்படம் வெளியாகியுள்ளது.
பக்கத்து வீட்டுப் பையன் போலிருக்கும், ப்ரூக்ளினின் முழு நேர ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸ், க்வென் ஸ்டேசியுடன் மீண்டும் இணைந்த பின், மல்டிவெர்ஸில் சிக்கி, பல அண்டங்களில் இருந்து ஒன்றிணைந்த ஸ்பைடர் சொசைட்டியை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த சொசைட்டியில் உள்ள ஸ்பைடர்-மக்கள், பிரபஞ்சங் களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள னர். ஆனால், புதிதாய் முளைக்கும் அச்சுறுத்தலை எப்படிக் கையாள்வதென, ஸ்பைடர்-மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
மைல்ஸ் மொரால்ஸ், ஸ்பைடர்-மேனாக இருப்பது என்றால் என்ன என்று உறுதியாகத் தீர்மானிப்ப தோடு, உலகையும், தன் குடும்பத்தையும், இரண்டையும் காப்பாற்ற முடியும் என நம்பிக்கை கொள்கிறார். ஸ்பைடர் முகமூடியை யார் வேண்டுமானா லும் அணியலாம், ஆனால் ஒருவரது செயற்பாடுகளே அவரை ஹீரோவாக்குகிறது.
படத்தின் அனிமேஷன் காட்சிகள் சிறுவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் ரசிக்க வைக்கிறது. இப்படத்தின் முதல் பாத்தின் வெற்றி 2ம் பாகததை எதிர் பார்ப்புக்குள்ளாகி இருந்தது.
தொழில்நுட்பக் குழு:-
இபடத்தை ரசிக்கும் கதை அமைப்புடன் ஜோ குய்ம் சான்டஸ் , கேம்ப் பவர்ஸ் மற்றும் ஜஸ்டின் கே தோம்ப்சன் (Joaquim Dos Santos, Kemp Powers and Justin K. Thompson) இயக்கியுள்ளனர்
பில் லார்ட், கிறிஸ்டோபர் மில்லர் மற்றும் கால்ஹம் ஆகியோர் மார்வெல் காமிக்ஸ் மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளனர்.