Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில் மோதி பயங்கர விபத்து 288 பேர் பலி, 1000 பேர் காயம்

ஒடிசாவில் ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மோதி படுபயங்கரமான கோர விபத்து நேற்று ( ஜூன்2) நடந்ததது. இதில் 288 பேர் வரை பலியாகியிருக்கி றார்கள், 1000 பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற தகவல்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:

ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்,
பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

மேற்குவங்காளம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை எம் ஜி ஆர் சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12841) சென்று வருகிறது. கர்நாடகம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 12864) இயக்கப்படுகிறது.

ஷாலிமாரில் இருந்து சென்னை எம் ஜி ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்துகொண்டிருந்தது. அதுபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றது.

நேற்று இரவு 7 மணி அளவில் பெங்களூரு ஹவுரா ரயில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தன.

ஆனால் அந்த தண்டவாளத்தில் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை எம் ஜி ஆர் சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துகொண்டி ருந்தது. ஏற்கனவே தடம்புரண்ட பெங்களூரு-ஹவுரா ரயில் பெட்டிகள் மீது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதியது இதில் இடியிடித்தது போல் சத்தம் கேட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் . அந்த ரயில்கள் மீது சரக்கு ரயில் மோதியது.
மொத்தமாக 3 ரெயில்கள் ஒரே இடத்தில் விபத்துக்குள்ளாகின.
இந்த பயங்கர விபத்தில் சுமார் 288 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த பயங்கர விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதிக்கு மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் விபத்து நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். .
அதேவேளை,

விபத்தில் சிக்கிய ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில்
தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பலர் பயணித்து உள்ளனர் . அவர்கள் கதிபற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு நேரில் சென்று ஆய்வுபணிகள் மேற்கொண்டு தமிழ்த் பயணிகளை பற்றி கேட்டறிந்துடன் அவர்களை மீட்டு சென்னை அழைத்து வருவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
மேலும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஒடிசா விரைந்து நேரில் மீட்பு பணிகள் மற்றும் தேவையான உதவிகள் வழங்குகின்றனர்.

 

விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள் ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து ரெயில்வே அமைச்சகம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 280 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

Related posts

Prime Video Unveils Trailer of System..

Jai Chandran

மைதான் ( இந்தி பட விமர்சனம்)

Jai Chandran

ஆல்ஃபா பட படப்பிடிப்பில் இணைந்தார் அலியா பட்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend