.படம் : சைத்ரா
நடிப்பு: யாஷிகா ஆனந்த் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி
தயாரிப்பு: கே.மனோகரன்
இசை: பிரபாகரன் மெய்யப்பன்
ஒளிப்பதிவு: சதீஷ்குமார்
இயக்கம்: எம்.ஜெனித்குமார்
பி ஆர் ஒ- : மணவை புவன்
கணவருடன் பங்களா போன்ற பெரிய வீட்டில் வாழ்கிறார் யாஷிகா. இவரது நண்பர்கள் இரண்டு பேர் இறந்து விட அதே ஞாபகத்தில் இருக்கிறார். அவர்கள் நேரில் வந்து யாஷிகா விடம் பேசுவதால் பயப்படும் யாஷிகா தற்கொலைக்கு முயல் கிறார். அவரை தடுத்து காப்பாற்றும் கணவர் ஒரு கட்டத்தில் வேறு வீட்டுக்கு குடி செல்ல முடிவு செய்கிறார். வீடு பார்க்கச் சென்ற இடத்தில் விபத்தில் கணவர் இறக்கிறார் ஆனால் அவரும் உயிருடன் வந்து யாஷிகாவிடம் பேசும்போது அதிர்ச்சி அடைகிறார்.. இதற்கிடை யில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் யாஷிகாவின் பேய் வீட்டில் சிக்கிக் கொள்கிறார். இதிலிருந்து அவரால் விடுபட முடிகிறதா என்பது கிளைமாக்ஸ்.
யாஷிகா 2 வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். அதன்பிறகு நடித்த படம் சைத்ரா. இது அவரது நிஜ சம்பவத்தை தொடர்பு படுத்தும் கதையாக இருப்பதால் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடத்தி ருக்கிறார்.
யார் பேய், யார் உயிரோடு இருக்கி றார்கள் என்பதை யூகிக்க முடியாமல் பாத்திரங்கள்
உருவாக்கப்பட்டிருப்பதால் சஸ்பென்ஸ் காட்சிகள் எடுபடு கிறது.
தெரிந்த முகம் என்றால் யாஷிகா மட்டும்தான் என்று சொல்ல வேண்டும் மற்ற பாத்திரங்கள் எல்லாமே புதுமுகம் என்றாலும் வேடத்தை சொதப்பாமல் நடித்தி ருக்கின்றனர்.
வழக்காக பேய் வேறு உருவத்தில் தான் சினிமாவில் காட்டப்பட்டிருக் கிறது. இதில் எல்லா.பேயும் தங்களது தோற்றத்திலேயே வருவ தால் எது பேய், எது நிஜபாத்திரம் என்று தெரியவில்லை. அது கதைக்கு பிளஸ் ஆக இருக்கிறது.
கே.மனோகரன் தயாரித்திருக் கிறார்.
பிரபாகரன் மெய்யப்பன் இசை ஒ.கே.
சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு பயமுறுத்தாமலிருப்பதும் பிளஸ்.
பேய் படத்தை வித்தியாசமான கோணத்தில் இயக்கி.இருக்கிறார்
எம்.ஜெனித்குமார்.
சைத்ரா – மிடில் கிளாஸ் ரகம்
