எஸ். லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் ‘ சர்தார்’. கார்த்தி நடித்த படங்களி லேயே அதிக செலவில் எடுக்கப்பட்டு வரும் படம்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அசர்பை சான் நாட்டில் நடந்தது. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளுக்காக மட்டுமே அசர்பைசான் சென்று படமாக்கினார்கள்.

இது வரை ஷூட்டிங் எடுக்கப்படாத அசர்பைசான் பாராளுமன்றத்திலேயே ஷூட்டிங் நடத்தப்பட்டது. பாராளுமன்றம் நடைபெறுவது போலவும், அதில் வில்லன் சங்கி பாண்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. மற்றும் பல இடங்களில் படமானது. இதையடுத்து ஜார்ஜியா விலும் படமாக்கப்பட்டது. இந்த இரு இடங்களில் நடைபெற்ற காட்சிகளுக்காக மட்டுமே ரூபாய் 4 கோடி செலவு செய்யப் பட்டது. இதனை தொடர்ந்து சென்னை யில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் கார்த்தியுடன் ராஷிகண்ணா, ராஜேஷ் விஜயன், சங்க்கி பாண்டே, , லைலா, யோகிபாபு, முனிஸ்காந்த், மாஸ்டர் ரித்விக் அவினாஸ், முரளி சர்மா
இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ், எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ். எடிட்டர் ரூபன். ஆர்ட் டைரக்டர் கதிர். ஸ்டன்ட் திலிப் சுப்ரமணியன். போஸ்டர் டிசைனர் சிவகுமார் ( சிவா டிஜிட்டல் ஆர்ட்). நிர்வாக தயாரிப்பாளர். கிருபாகரன் ராமசாமி. தயாரிப்பு நிர்வாகம் பால் பாண்டி. பி ஆர் ஒ ஜான்சன்.
