Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

தங்கலான்: பழங்குடி ஆவேச பெண்ணாக மாளவிகா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவித மான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக் கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்.

சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள “தங்கலான்” திரைப் படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான “பியாண்ட் தி க்ளவுட்ஸ்”, படத்திலேயே மிக கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது நடிப்புத் திறமைக்குச் சான்றாகும்.

தமிழின் மிக முக்கியமான புகழ்மிகு இயக்குநரான பா ரஞ்சித்துடன் இணைந்து பணிபுரிவது, சந்தேகத்திற்கு இடமின்றி அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். பா ரஞ்சித் உடனான கூட்டணியில், அவரை வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பது ரசிகர் களுக்குச் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். “தங்கலான்” படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள் ளார் என்பது அவரது பன்முக திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

திரைப்படத் துறையில் பல்வேறு பாத்திரங்களில் அசத்தி வரும், மாளவிகா மோகனனின் திறமை அவரது ரசிகர்கள் பாராட்டக்கூடிய ஒன்றாகவுள்ளது, மேலும் இது அவரது வரவிருக்கும் திரைப்படங் களுக்குப் பார்வையாளர்களை ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது.

Related posts

போஸ் வெங்கட் திறமையை நிரூபித்த ” கன்னி மாடம் “

Jai Chandran

தயாரிப்பாளர் சி வி குமார் இயக்கும் கொற்றவை

Jai Chandran

3:33 (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend