Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விக்ரம் வெற்றி: கமல்ஹாசன், லோகேஷுக்கு தயாரிப்பாளர் விஜயமுரளி வாழ்த்து

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெள்ளி விழா கண்ட ஏவிஎம் தயாரித்த
” சகலகலாவல்லவன்” திரைப்படத்திற்கு கிளாமர் கிருஷ்ணமூர்த்தி மக்கள் தொடர்பாளராக பணியாற்றினார் அந்த படத்திற்கு நான் உதவி மக்கள் தொடர்பாளராக பணியாற்றினேன்.

உலகநாயகன் கமல்ஹாசன்   நடித்து ஹரியும் விக்மேக்கர் ஹரியும் இணைந்து தயாரித்த ” அவ்வை சண்முகி” வெற்றி வாகை சூடி வசூலில் சாதனை படைத்த படத்திற்குதான் தனித்து மக்கள் தொடர்பாளராக பணியாற்றினேன்.

அதன் பிறகு நிறைய தடவை அவர் அலுவலகத்திற்கு சென்றுவந்துள்ளேன். ஆனால் இன்று கமல் நடித்து உலக அளவில் வெற்றிவாகை சூடி வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கும்” விக்ரம்’ படத்தின் வெற்றிச் சந்திப்பில் அவரை சந்தித்து சால்வை அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த தருணம் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக அமைந்தது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த இளம் வயதில் தனது இயக்கத்தில் வெளிவரும் படங்களை வெற்றிப்படங்களாக மாற்றும் வல்லமை பெற்றவர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி

இந்த வெற்றி கூட்டணி தொடர்ந்து தொடர் வெற்றிகளை குவிக்க பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.

இவ்வாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்  செயற்குழு உறுப்பினர்  என்.விஜயமுரளி கூறியுள்ளார்.

Related posts

ஷாருக் படத்துக்கு மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து வரவேற்பு

Jai Chandran

அன்லான் ஆர்ட் சலூன் திறப்பு தோனி, சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

Jai Chandran

டீமன் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend