சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்ற கேள்வி கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நிலவி வந்தது. 2020 டிசம்பர் 12ம் தேதி அவர் தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடினார். அதற்கு முன்னதாக அளித்த பேட்டியில் டிசம்பர் 31ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது பற்றி தேதி அறிவிக்க உள்ளதாகவும், ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடித்தார். அப்போது படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை த்னிமைப்படுத்திக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 நாள் சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆனார். ஆனாலும் அவரை ஒரு வாரம் பெட் ரெஸ்ட்டில் இருக்கும் படியும் கொரோனா பாதிப்பு சூழலில் இருக்கக்கூடாது என்றும் டாக்டர்கல் அறிவுரை வழங்கினார். பிறகு சென்னை திரும்பிய நிலையில் அவர் அரசியல் கட்சி தொடங்குவில்லை என்ற முடிவை அறிவித்தார்.
இதுகுறித்து ரஜினிகாந்த டிவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: