பிரிட்டீஷாரை எதிர்த்து போராடிய சிவகங்கை ராணி வேலு நாச்சியார் பற்றி சரித்திரபடம் உருவாவதாக வும் இதில் நயன்தாரா வேலு நாச்சியாராக நடிப்பதாகவும் சில தினங் களுக்கு முன் தகவல்கள் வெளி யாகின.
ஏற்கனவே சிரஞ்சிவி நடிப்பில் உருவான சே ரா நரசிம்மா ரெட்டி படத்தில் நயன்தாரா நடித்திருந்தாலும் வேலு நாச்சியார் பாத்திரம் என்பது அவரது தனித் திறமை யை வெளிப்படுத்தும் கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தனர். ஆனால் நயன்தாரா தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது:
ராணி வேலு நாச்சியார் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நயன்தாரா நடிப்பதாக வரும் சில ஊடகங்களில் வரும் தகவலில் உண்மை இல்லை. இது வதந்திதான். இதுபோன்ற தகவல்களை வெளியிடும் போது அதனை உறுதி செய்து கொண்டு வெளியிடுமாறு கேட்டு கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.