தமிழ்நாட்டின் துணை முதல்வராக 2024 செப்டம்பர் 29ம் தேதி பதவி ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். இராமசாமி மற்றும் நிர்வாகிகள் இணைந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது கறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
மகன் தந்தைக்காற்றும் உதவி அவையத்து முத்தி இருப்பச் செயல் என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாய் செயல்பட்டு வருபவர் தான் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். தாத்தா கலைஞர் போலவே திரை உலகில் ஈடுபாடு கொண்டவர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர். நடிகர், வினியோகஸ்தராக இருந்தவர். பன்முக தன்மை கொண்டவர். அரசியலில் நுழைந்து குறுகிய காலத்தில் தன் கடின உழைப்பால் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடியவர். பின்னர் அமைச்சரானவர். அமைச்சர் பதவியில் தன் பணியை செவ்வனே செய்து மக்களின் பாராட்டுக்களை அள்ளியவர். தன்னை முன்னிலை படுத்தாமல் தமிழ்நாடு அரசின் ஆட்சியையும், நிர்வாக திறமையையும் மக்களிடம் எடுத்து சென்றவர். அவரது சீரிய பணியால் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அவரை துணை முதல் அமைச்சராக்கியுள்ளார்.
தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்து வலம் வந்தவர். அரசியலிலும் எளிமையே வலிமை என அனைவரிடமும் பழகி வருபவர்.
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று துணை முதல்வரானது திரை உலகிற்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்வான தருணமாகும்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு பல்வேறு நலப் பணிகளை செய்தவர். இனி தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயனடையும் வண்ணம் அவரது பணி மேன்மேலும் சிறக்கும். இனி மக்களின் மனதில் அவருக்கு நிரந்த இடம் கிடைக்கும்.
முயற்சி மற்றும்
விடாமுயற்சிக்கு
எடுத்துக்காட்டாய் பணிபுரிந்து வந்தவர்.
மக்களின்
துணைமுதல்வர்
மாண்புமிகு
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு
திரை உலகம் சார்பில்
வாழ்த்துக்களையும்,
பாராட்டுக்களையும் அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில்
தெரிவித்துக் கொள்கிறோம் “.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பேரன்பிற்கும் மரியாதைக்குரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,
வணக்கம், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினருமான தாங்கள் தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உள்ளார்ந்த மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் மிகுந்த பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், இளைய சமுதாயத்திற்கு ஒரு விடிவெள்ளியாக ஒளிரவும் நம் தமிழகத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் சீரிய முறையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும்
தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி,
தங்கள் உண்மையுடனும், பேரன்புடனும்
இவ்வாறு நாசர் கூறியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி அவர்களுக்கு நடிகர் உதயா தெரிவித்துள்ள வாழ்த்து:
தமிழ்நாட்டின் துணை முதல்வராக மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தயாரிப்பாளராகவும், நடிகராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் பிரகாசித்து நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருக்கும் உதயநிதி அவர்கள் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவது ஒட்டுமொத்த திரையுலகிற்கே பெருமை. தமிழ் திரையுலகத்திலிருந்து முதல் துணை முதல்வர் ஆகி வரலாறு படைத்திருப்பது உதயநிதி அவர்கள் என்பது பெருமகிழ்ச்சி.
இந்த உற்சாக தருணத்தில், கலைஞரின் மதி நுட்பத்தோடும், தளபதியாரின் உழைப்போடும் செயலாற்றி வரும் உதயநிதி அவர்கள் இன்னும் பல சாதனைகளை புரிந்து பல்வேறு உயரங்களை எட்ட வேண்டும் என்று ஒரு சகோதரனாகவும் சக கலைஞனாகவும் வாழ்த்தி, வணங்கி, மகிழ்கிறேன்.ந
இவ்வாறு நடிகர் உதயா. கூறியுள்ளார்.
தமிழ் சினிமா பத்திரிகையாளர் சங்கம் ( TNJA) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி Head of Lyca Productions .GKM தமிழ் குமரன் தமிழ் நாடு துணை முதலமைச்சராக பதிவியேற்றுள்ள .உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தனர்
@MShenbagamoort3 @gkmtamilkumaran @teamaimpr