Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பேபி அண்ட் பேபி (பட விமர்சனம்)

படம்: பேபி அண்ட் பேபி

நடிப்பு: ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நகரா, சாய் தன்யா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இளவரசு, சிங்கம் புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, பாப்பாரி கோஷ், ராமர் தங்கதுரை, சேஷு, கல்கி ராஜா, பிரதோஷ்

தயாரிப்பு: யுவராஜ் பிலிம்ஸ்

இசை: டி இமான்

ஒளிப்பதிவு: டிபி சாரதி

இயக்கம்: பிரதாப்

பிஆர்ஓ: சதீஷ் S2 மீடியா

ஜெய், யோகி பாபு இருவரும் தங்கள் குழந்தை மற்றும் மனைவிமார்களை  அழைத்துக் கொண்டு துபாயில் இருந்து இந்தியா திரும்புகிறார்கள். விமான நிலையத்தில் இவர்களின் கைக்குழந்தைகள் இடம் மாறி விடுகின்றன. ஜெய்க்கு ஆண் குழந்தை, யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இந்த குழந்தைகள் தான் மாறி விடுகின்றன. ஆனால் அந்த குழந்தைகளை மனதில் வைத்து தான் இவர்கள் இருவரின் பெற்றோர்களும் மீண்டும் தங்கள் குடும்பத்தில் சேர்த்துக் கொள்வதுடன் சொத்துக்கு வாரிசாக்கவும் எண்ணி உள்ளனர். குழந்தைகள் மாறிவிடவே இரண்டு குடும்பத்திலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. சிலர் குழந்தைகளை கடத்தி செல்கின்றனர். இந்த குழப்பங்கள் எல்லாம் எப்படி தீர்க்கிறது என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறது பேபி அண்ட் பேபி.

படத்தின் டைட்டில் பேபி அண்ட் பேபி என்பதற்கு ஏற்ப குழந்தைகளுடன் சென்று பார்க்கும் படமாக உருவாக்கியிருக்கிறது. அதற்காக இயக்குனர் பிரதாப்பிற்கும் ஹீரோ ஜெய் , யோகி பாபு ஆகிய மூவருக்கும்  பாராட்டு சொல்லலாம் காரணம் குத்து வெட்டு வன்முறை என்று தான் படங்கள் நிறைய வருகின்றன இடையிடையே இது போன்ற குடும்ப பங்கான கலகலப்பு படங்கள் தான் ரசிகர்களை சோர்ந்து விடாமல் வைத்திருக்கிறது.

ஹீரோ ஜெய் கதாபாத்திரத்தோடு தன்னை இணைத்துக் கொண்டிருப்பதால் வெட்டி வீராப்பு எதுவும் இல்லாமல் குடும்பபாங்காக  நடித்து வித்தியாசமாக மனதில் பதிகிறார். கிங்கினி கிங்கினி பாடலுக்கு அசத்தலான நடனம் ஆடுகிறார். திடீரென்று ஆக்ஷன் காட்சியிலும் அசத்துகிறார்.

யோகி பாபு பொறுப்பான ஒரு தந்தையாக மட்டுமல்லாமல் தனது பங்குக்கு என்னவெல்லாம் காமெடியில் கலக்க முடியுமோ அவ்வளவு கலக்கியிருக்கிறார்.

போதாக்குறைக்கு ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன் சிங்கம் புலி, தங்கதுரை, ராமர் என பெரிய பட்டாளமே ஒன்று சேர்ந்து காமெடி கும்மாளம் போட்டிருக்கிறது.

சத்யராஜ், இளவரசு இருவரும்L கறார் தந்தைகளாக கிடைத்திருக்கிறார்கள்.

யுவராஜ் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.

டி இமான் இசையில் பாடல்கள் எல்லாமே 90ஸ் காலகட்ட பாடல்கள் போல் தெளிவாக இனிமையாக ஒலிக்கிறது.

டிபி சாரதி கலர்ஃபுல்லாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் பிரதாப்
இன்னொரு சுந்தர் சி போல் இயக்கி உள்ளார்.

பேபி அண்ட் பேபி – மனம் விட்டு சிரிக்க..

Related posts

எழுத்தாளர் ராஜேஷ் குமார் உலகிலிருந்து “ரேகை” த்ரில்லர் சீரிஸ்

Jai Chandran

Three days more for Doctor

Jai Chandran

பயணிகள் கவனிக்கவும்” கவனிக்க வைத்திருக்கும் கருணாகரன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend