ரஜினியின் 4 தெய்வங்கள், கமலின் வழிகாட்டி..
கே பி 90வது பிறந்தநாள்..
இன்று சாதனை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரின் 90வது பிறந்தநாள். அவரது மாணவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கே பி யின் புகழ் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் கூறியதாவது : எனது குருநாதர் கே.பி. சாரின் 90 வது பிறந்தநாள் இன்று. என்னை அவர் நடிகனாக அறிமுகப்படுத்தி யிருக்கவிட்டாலும் நடிகனாகி இருப்பேன். ஆனால் வில்லன் அல்லது சிறிய கதாபாத்திரங்களை
செய்துகொண்டிருந்திருப் பேன் ஆனால் இந்தளவுக்கு பேர் புகழுடன் செல்வத்து டன் நான் வசதியாக வாழ கேபி சார்தான் காரணம். அவர்தான் என் பெயரை மாற்றி எனக்குள் இருந்த நெகடிவ்களை நீக்கி எனக்குள் இருந்த பாசிடிவ் எண்ணங்களை சொல்லி உலகுக்கும் எனக்குமே என்னை காண்பித்தார். என்னை முழுமையான நடிகராக்கினார், 4 படங்க ளுக்கு ஒரு ஒப்பந்தத்தை எனக்கு தந்து அறிமுகப்படுத் தினார்.
என்னை பெற்ற என் தாய், தந்தை, என்னை வளர்த்த என் அண்ணன், குரு நாதர் பாலசந்தர் சார் இவர்கள் நான்கு பேரும் எனக்கு தெய்வங்கள்’ என கூறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
” ஒரு இளைஞனாக நான் கேள்விப்பட்ட கே.பாலச் சந்தர் என்ற அந்த ஒரு பெயரில் அவரது புகழை உணர முடிந்தது. ஒரு நடிகரின் வாழ்க் கையில் அவர் பல வேடங்களில் தனது பங்களிப்பார் என யார்தான் நினைத்துப் பார்க்க முடியும். அவர் ஒரு வழிகாட்டி, பங்குதாரர் ஒத்துழைப்பாளர், தந்தை என பல கட்ட பாத்திரங்களை என் வாழ்வில் அவர் பங்கெடுத்திருக்கிறார் . இந்திய சினிமாவில் மிகமுக்கிய பங்காற்றி இருக்கும் கேபி சாருக்கு எனது வணக்கம்’ என்றார் கமல்.